பகுதி - 293
என்றென்றும் நீங்காமல் பற்றியிருக்கும் தீயவினைகள் சூழ்ந்து மூடியுள்ளதால் நோயும் பிணியும் உடையவனும்;
பதச் சேதம் | சொற் பொருள் |
ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறி பேணா Advertisement
| ஏ: அம்பு; ஏவினை: அம்பினை; நேர்விழி: ஒத்த விழி; ஏதன்: கேடன்; நெறிபேணா: நன்னெறிகளைப் போற்றாத, பின்பற்றாத; |
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள்
| ஈனன்: இழிந்தவன்; ஏடெழுதா: படிப்பில்லாத; ஏழை: அறிவற்றவன்; மோழை: மடையன்; |
மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதானை இகழாதே
| மாவினை: பெரிய வினை; நோய்: வந்து தீர்வது நோய்; பிணி: திரும்பத் திரும்ப வருவது பிணி (பசி, பிறவி போன்றவை); |
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வு உற ஈவதும் ஒரு நாளே
| நூபுரம்: சிலம்பு, பாதசரம்; சீதள: குளிர்ந்த; வாழ்வுற: வாழ்வை அடையுமாறு; |
நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை
| நாவலர்: புலவர்கள்; இசை: புகழ்; நாரதனார் புகல்: நாரதர் எடுத்துச் சொன்ன; |
நாடியே கான் இடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே
| கான்: காடு; சேவக: வீரனே; நாயக: தலைவனே; |
தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே

சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே.
| சேண் உயர்: விண்ணளவு உயர்ந்த; |

ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை... அம்பை ஒத்த கண்களை உடைய பெண்களை விரும்புகின்ற கேடுகெட்டவனும்;

மூடனை நெறி பேணா ஈனனை ... மூடனும்; ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்காத இழிந்தவனும்;

ஏடெழு தாமுழு ஏழையை மோழையை... படிப்பறிவற்றவனும்; முழு மூடனும்; மடையனும்;

அகலா நீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை... என்றென்றும் நீங்காமல் பற்றியிருக்கும் தீயவினைகள் சூழ்ந்து மூடியுள்ளதால் நோயும் பிணியும் உடையவனும்;

வாய்மை யிலாதனை இகழாதே... உண்மை இல்லாதவனும் ஆகிய அடியேனை இகழ்ந்து ஒதுக்கிவிடாமல்,

மாமணி நூபுர சேதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒருநாளே......உயர்ந்த மணிகளால் அமைந்துள்ள சிலம்புகளை அணிந்திருக்கும் உன் பாதங்களை, நான் வாழ்வை (முக்தியை) அடையும்படித் தந்தருளும் நாளும் உண்டா? (உன் பாதங்களை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்).

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் ... புலவர்கள் பாடியுள்ள நூல்களில் இடம்பெறும் புகழ் உள்ளவரான நாரதர்,

புகல் குற மாதை ... (உன்னிடத்திலே வந்து) எடுத்து ஓதிய குறப்பெண்ணான வள்ளியை,

நாடியெ கானிடை கூடிய சேவக நாயக... விரும்பிக் காட்டுக்குச் சென்று கூடிய வீரனே, தலைவனே!

மாமயில் உடையோனே ... பெரிய மயிலை வாகனமாக உடையவனே!

தேவி மநோமணி ஆயிப ராபரை ... தேவியும்; மனோன்மணியும்; தாயும்; பராபரையும்;

தேன்மொழி யாள்தரு சிறியோனே ... தேன் போன்ற இனிய மொழி பேசுபவளுமான உமையம்மையின் இளைய மகனே!

சேணுயர் சோலையின் நீழலி லேதிகழ்... ஆகாயத்தை முட்டுமளவுக்கு உயர்ந்துள்ள சோலைகளின் நிழலிலே விளங்குகின்ற,

சீர் அலைவாய் வரு பெருமாளே. ... திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

(முன்னொரு காலத்தில்) நாரத மாமுனிவர் உன்னிடத்திலே வந்து (இன்ன பெருமைகளை உடையவள் என) வருணித்துச் சொன்ன வள்ளியம்மையை விரும்பிக் காட்டுக்குச் சென்று அவளோடு கலந்தவனான வீரனே! தலைவனே! மயில் வாகனனே! தேவியும் மனோன்மணியும் தாயும் பராபரையும், தேன்போன்ற சொல்லுடையவளுமான உமையம்மையின் சிறிய மகனே! விண்ணளவு உயர்ந்த சோலைகளின் நிழலிலே விளங்குகின்ற, அலைவாய் என்ற கடற்கரைத் தலமான திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

அம்பு போன்ற கண்களை உடைய பெண்களை விரும்புபவனான கேடனும்; மூடனும்; நல்லொழுக்கம் இல்லாதவனும்; என்றும் அகராத பெரிய வினையால் மூடப்பட்டு அதனால் நோயும் பிணியும் உள்ளவனும்; உண்மையற்றவனுமான அடியேனை இகழ்ந்து ஒதுக்கிவிடாமல் உயர்ந்த மணிகளால் அமைந்துள்ள பாத கிண்கிணிகளை அணிந்துள்ள உன் திருப்பாதங்களை, அடியேன் முக்தியின்பமான வாழ்வை அடையும்படி அளித்தருள வேண்டும்.