பகுதி - 296
ஆறு படைவீடுகளுக்கும் பொதுவாகப் பாடப்பட்டுள்ள இரண்டு பாடல்களில் இரண்டாவது இது. இறைவனுக்கு அடிமையாக விளங்கும் பேற்றை வேண்டுகிறது.
ஆறு படைவீடுகளுக்கும் பொதுவாகப் பாடப்பட்டுள்ள இரண்டு பாடல்களில் இரண்டாவது இது. இறைவனுக்கு அடிமையாக விளங்கும் பேற்றை வேண்டுகிறது. ‘சாரதி உத்தமி துணைவ முருகோனே’ என்ற அடியை, ‘சாரதி’=சரஸ்வதி என்றும் கொள்ளலாம்; சா ரதி என்று பிரித்து ‘அந்த ரதிக்குத் துணைவனே’ என்றும் கொள்ளலாம். மாமனான திருமாலுக்கு மகன் என்ற முறையில் பிரமனும் மன்மதனும் முருகனுக்கு மைத்துனன் முறை ஆவதால், சரஸ்வதியும் ரதிதேவியும் சகோதரி முறை ஆகிறார்கள் என்று உரையாசிரியர் தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார். ‘மதனனுக்கும் சதுர்முகற்கும் மைத்துனன்காண் அம்மே’ என்று திருமலையாண்டவர் குறவஞ்சியிலிருந்து இதற்கான ஆதாரத்தையும் சுட்டுகிறார். ‘விநாயகருடைய துணைவன்’ என்னும்போது சகோதரன் என்ற பொருள் வருவதைப் போலவே இங்கேயும் ‘துணைவன்’ என்றால் சகோதரன் என்று பொருள்படுகிறது.
தானதனத் தனதனன தனதானா
ஈனமிகுத் துளபிறவி யணுகாதே
யானுமுனக் கடிமையென வகையாக
ஞானஅருட் டனையருளி வினைதீர
நாணமகற் றியகருணை புரிவாயே
தானதவத் தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே
ஆனதிருப் பதிகமரு ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/272416477&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /><br /> </p>
Advertisement