முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 299

ஐராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்டவளும்; பதினாறு முத்து வடங்களால் ஆன இடையணியாகிய கலாபத்தை அணிந்தவளுமான தேவானையம்மையின் கலசம் போன்றதும்;

Updated On : 11 ஜூலை, 2016 at 4:52 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:11 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அஞ்சு வித பூதமும் கரணம் நாலும் அந்தி பகல் யாதும் அறியாத

Advertisement

அஞ்சுவித பூதம்: பஞ்ச பூதங்கள்; கரணம் நாலும்: புத்தி, மனம், சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு புலன்கள்;

அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு

நடு ஆதி: முதல், இடை (முடிவு=அந்தம்);

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர் மங்கை தானை நாடி வனம் மீது

மஞ்சு: மேகம்; சாரல்: குளிர்ந்த காற்று; அம்: அழகிய; சயில வேடர்: மலைவாழ் வேடர்கள்; வேடர் மங்கை: வள்ளி;

வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே

சராணரவிந்தம்: சரண அரவிந்தம்—திருவடித் தாமரை; விநோதம்: அற்புத அழகு;

குஞ்சர கலாப வஞ்சி அபிராம குங்கும படீர அதிரேக

குஞ்சரம்: யானை(யால் வளர்க்கப்பட்ட); கலாப: மயில் தோகை, மயில் போன்ற (பதினாறு வடங்களைக் கொண்ட முத்தாலான இடையணி என்றும் பொருள்); வஞ்சி: தேவானை; அபிராம: அழகிய; படீர: சந்தனம்; அதிரேக: மிகுதியாக;

கும்ப தன(ம்) மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப

கும்ப: கலசம்; அணையும்: தழுவும்; குன்று: கிரெளஞ்சம்; இகல்: பகை, பகைத்து;

வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடிவேலை விடுவோனே

வெம்: வெம்மை, கொடிய; சமர: போரிட்ட; பக: பிளக்க; வென்றி: வெற்றி;

விம்ப மதில் சூழ நிம்பபுர வாண விண்டல மகீபர் பெருமாளே.

விம்ப: ஒளி பொருந்திய; வாண: வாழ்பவனே; விண்டல: விண் தல, வானுலக, தேவலோக; மகீபர்: அரசர்;

அஞ்சுவித பூதமும் ... ஆகாயம், நீர், நெருப்பு, காற்று, மண் என்ற ஐந்துவிதமான பூதங்களும்;

கரண நாலும் ... புத்தி, மனம், சித்தம், அகங்காரம் என்ற நான்கு கரணங்களும்;

அந்திபகல் யாதும் அறியாத ... இரவும் அற்ற; பகலும் அற்ற;

அந்தநடு ஆதி யொன்றுமிலதான ... ஆதி, நடு, அந்தம் (தொடக்கம், நடப்பு, முடிவு) எதுவுமே இல்லாததான;

அந்தவொரு வீடு பெறுமாறு ... அந்த ஒப்பில்லாத வீடு பேற்றைப் பெறுமாறு;

மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் மங்கைதனை நாடி வனமீது... மேகம் தவழ்வதும் குளிர்ந்த காற்று வீசுவதுமான மலைவாழ் வேடர்களின் மங்கையாகிய வள்ளியம்மையை நாடி, (வள்ளிமலைக்) காட்டுக்கு,

வந்த சரணார விந்தம் அது பாட ... வந்து சேர்ந்த சரண அரவிந்தமான உன் திருவடித் தாமரைகளைப் பாட (எனக்கு),

வண்டமிழ் விநோதம் அருள்வாயே ... வலிய தமிழின் அற்புதமான அழகை (கவித்துவத்தை) அடியேனுக்கு அருள வேண்டும்.

குஞ்சர கலாப வஞ்சி ... (இந்திரனுடைய ஐராவதம் என்ற) யானை (வளர்த்தவளும்); பதினாறு முத்துக் கோவைகளையுடைய  இடையணியை அணிந்தவளான தேவானையுடைய,

அபிராம குங்கும படீர அதிரேக ... அழகானதும்; குங்குமக் குழம்பும், சந்தனக் கலவையும் மிகுதியாகப் பூசப்பட்டதுமான,

கும்பதன மீது சென்றணையு மார்ப ... கலசம் போன்ற தனங்களின் மீது படிந்து தழுவுகின்ற திருமார்பை உடையவனே!

குன்று தடுமாற இகல்கோப ... கிரெளஞ்ச மலை கலங்குமாறு அதைப் பகைத்துக் கோபித்தவனே!

வெஞ்சமர சூரன் நெஞ்சு பக ...கொடிய போரைச் செய்த சூரபத்மனுடைய நெஞ்சு பிளவுபடும்படியாக,

வீர வென்றி வடிவேலை விடுவோனே ... வீரமும் வெற்றியும் நிறைந்த கூர்மையான வேலை எறிந்தவனே!

விம்பமதில் சூழு நிம்பபுர வாண ... ஒளி பொருந்திய மதில்களால் சூழப்பட்ட நிம்பபுரம் என்ற தலத்தில் வீற்றிருப்பவனே!

விண்டல மகீபர் பெருமாளே. ... தேவலோகத்து அரசனான இந்திரனுடைய பெருமாளே!

சுருக்க உரை

ஐராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்டவளும்; பதினாறு முத்து வடங்களால் ஆன இடையணியாகிய கலாபத்தை அணிந்தவளுமான தேவானையம்மையின் கலசம் போன்றதும்; குங்குமக் கலவையும் சந்தனக் குழம்பும் மிகுதியாகப் பூசியதுமான மார்பில் படியுமாறு இறுகத் தழுவுகின்ற மார்பனே!  கிரெளஞ்ச மலை தடுமாறும் படியாக அதைப் பகைத்துக் கோபித்தவனே!  கொடிய போர் செய்த சூரனுடைய நெஞ்சைப் பிளக்கும்படியாக வீரமும் வெற்றியும் நிறைந்த வேலை வீசியவனே!  ஒளிபொருந்திய மதில்கள் சூழ்ந்த நிம்பபுரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்றவனே!  தேவேந்திரனுடைய (தலைவனே) பெருமாளே!

ஐந்து பூதங்களும்; நான்கு கரணங்களும்; இரவும்; பகலும்; ஆரம்பம், நடு, முடிவு—இவை எதுவுமே அற்றதான அந்த முக்தியான வீடு பேற்றை அடியேன் அடையும்படியாக,

மேகங்க;ள தவழ்கின்ற சாரலை உடைய மலைகளில் வாழும் வேடர்குலப் பெண்ணான வள்ளியை விரும்பி வள்ளி மலைக் காட்டுக்கு வந்து சேர்ந்தவையான உன் பாதகமலங்களை,

பாடும்படியாக அடியேனுக்கு வலியதும் அற்புத அழகை உடையதுமான தமிழைத் தந்தருள வேண்டும்.

மிகச் சுருக்கமாக,

அடியேன் வீடுபேற்றை அடையும்படி உன் பாதகமலங்களைப் பாடுவதற்காக, அற்புதமான தமிழைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.