முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 300

வெள்ளிகரம் என்னும் திருத்தலத்துக்கான பாடல் இது.  இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ளது. 

Updated On : 12 ஜூலை, 2016 at 4:32 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:11 PM

வெள்ளிகரம் என்னும் திருத்தலத்துக்கான பாடல் இது.  இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ளது. 

‘சும்மா இரு சொல்லற’ என்று இறைவன் சொன்னதனாலோ என்னவோ அருணகிரியாரின் பாடல்கள் பல இடங்களில் ‘சும்மா இருத்தல்’ என்னும் மௌன நிலையைக் கேட்பதாக இருக்கும்.

சொல்லுகைக் கில்லையென்று எல்லாமிழந்து சும்மா விருக்கும்
எல்லையுட் செல்ல
எனைவிட்டவா இகல் வேலனல்ல கொல்லியைச்
சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்னல் வல்லபமே.

என்பார் கந்தரலங்காரத்திலும்.  அந்தச் ‘சும்மா இருக்கும் எல்லை’தான் இன்றைய பாடலில் சொல்லப்படும், ‘மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே’ என்பதும்.  அடிக்கு இருபத்தைந்து எழுத்துகள் உள்ள பாடல்.  இரண்டாம் அரையடியான மடக்கடியில் தய்ய, தந்த என்னும் ஓசைகளைப் பெற்று வருகிறது.  பாடலைப் பார்ப்போம்.

Advertisement

தனதன தனன தனதன தனன
      தய்ய தனத்த தந்த                  தனதானா

அடலரி மகவு விதிவழி யொழுகு
         மைவரு மொய்க்கு ரம்பை        யுடனாளும்
      அலைகட லுலகி லலம்வரு கலக
         வைவர்த மக்கு டைந்து          தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
         டெல்லைவி டப்ர பஞ்ச           மயல்தீர
      எனதற நினது கழல்பெற மவுன
         வெல்லைகு றிப்ப தொன்று       புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
         வள்ளை யெனத்த யங்கு         மிருகாதும்
      மரகத வடிவு மடலிடை யெழுதி
         வள்ளிபு னத்தில் நின்ற           மயில்வீரா
விடதர திகுண ரசசிதர் நிமலர்
         வெள்ளிம லைச்ச யம்பு          குருநாதா
      விகசித கமல பரிபுர முளரி
         வெள்ளிக ரத்த மர்ந்த            பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273298049&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.