முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 301

வள்ளிப் பெருமாட்டியின் வடமணிந்த மார்பும் அழகிய முகமும் செவிகளும், மரகதப் பச்சை நிறமும் விளங்கித் தோன்றுமாறு

Updated On : 12 ஜூலை, 2016 at 4:31 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:12 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்) ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும்

Advertisement

அடல்: வலிமை; அரி: திருமால்; அரிமகவு: பிரமன்; ஐவர்: ஐந்து புலன்கள்; மொய்: மொய்த்த, நெருங்கியுள்ள; குரம்பை: கூடு, குடில் எனவே உடல்;

அலைகடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி

அலம்: துன்பம்; கலக ஐவர்: கலகம் செய்யும் ஐம்புலன்கள்; உடைந்து: மனமுடைந்து, கலங்கி;

இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர

உளம் உரை உடலொடு: மனம், பேச்சு, உடல் இவற்றோடு; எல்லை: உலகிலே ஈடுபடுகின்ற எல்லை;

எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே

எனது அற: நான், எனது என்பவை ஒழிய;

வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும்

வடமணி: மணிவடம்; வள்ளை: காதுக்கு உவமை சொல்லப்படும் ஒரு கொடி, கொடியின் பூ; தயங்கும்: விளங்கும்;

மரகத வடிவும் மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா

மடலிடை எழுதி: மடலிலே சித்திரமாகத் தீட்டி (மடலூர்தல் பற்றி விளக்கத்தில் காண்க);

விடதர் அதி குணர் அ சசிதர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா

விடதர்: விடத்தைத் தரித்தவர்; அ: அந்த; சசி: சந்திரன்; சசிதர்: சந்திரனைத் தரித்தவர்; சயம்பு: சுயம்பு, தான்தோன்றி;

விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே.

விகசிதம்: மலர்ந்த;

அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்) ... வலிமையுள்ளவராகிய திருமாலின் மகனான பிரமன் எழுதி வைத்துள்ள விதியின் வழியிலே செல்கின்ற,

ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் ... (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐந்து புலன்களும் மொய்த்துக் கொண்டு (ஒன்றாகச் சேர்ந்து) இயங்குகின்ற உடலோடு அனுதினமும்,

அலைகடல் உலகில் அலம் வரு கலக ... கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பத்தை உண்டாக்கிக் கலகங்களைச் செய்யும்,

ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி ... (மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற) புலன்களால் மனத்திண்மை உடைந்துபோய்த் தடுமாற்றம் கொண்டு,

இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு ... துன்பங்களுக்கு ஆளாகும் அடியேனுயை மனம் வாக்கு காயம் இந்த மூன்றும்,

எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர ... உலக விஷயங்களிலே ஈடுபடுவதிலிருந்து விலகவும்; உலக மயக்கம் ஒழியவும்;

எனது அற நினது கழல் பெற ... நான் எனது எனப்படும் அகங்கார மமகாரங்கள் அழியவும்;

மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே ... மௌனமாய் இருப்பதன் எல்லையை உணர்த்துவதாகி ஒரு உபதேசத்தை மொழிந்தருளவேண்டும்.

வட மணி முலையும் அழகிய முகமும் ... (வள்ளியம்மையுடைய) வடம் அணிந்த மார்பகத்தையும், அழகான முகத்தையும்,

வள்ளை என தயங்கும் இரு காதும் மரகத வடிவும் ... வள்ளைப் பூவைப் போல விளங்குகின்ற இரண்டு காதுகளையும்; மரகதப் பச்சை நிறத்தையும்;

மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா ... சித்திரமாகத் தீட்டிக் கொண்டு வள்ளியம்மை இருந்த புனத்திலே (அவற்றைப் பிடித்தவண்மாக) நின்ற மயில் வீரனே!

(காதலைப் பெறுவதற்காக காதலியின் உருவத்தை வரைந்து அதை ஏந்திய வண்ணம் மடலூர்வது ஒரு வழக்கம்)

விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் ... கண்டத்திலே விஷத்தைத் தரித்தவரும்; மேலான குணத்தை உடையவரும்; சந்திரனைச் சடையில் தரித்தவரும்; பரிசுத்தமானவரும்;

வெள்ளி மலை சயம்பு குருநாதா ... வெள்ளி மலை எனப்படும் கயிலையை உடையவரும்; சுயம்புவுமான பரமசிவனுடைய குருநாதனே!

விகசிதம் கமல பரிபுர முளரி ... மலர்ந்த கமலத்தைப் போன்றதும்; சிலம்பை அணிந்ததுமான திருவடித் தாமரைகளை உடையவனே!

வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே. ... வெள்ளிகரம் என்ற தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வள்ளிப் பெருமாட்டியின் வடமணிந்த மார்பும் அழகிய முகமும் செவிகளும், மரகதப் பச்சை நிறமும் விளங்கித் தோன்றுமாறு சித்திரமாகத் தீட்டி, அதை அம்மை இருந்த தினைப்புனத்திலே பிடித்தபடி நின்றவனே!  கண்டத்தில் ஆலகால நஞ்சைத் தரித்தவரும்; மேலான குணத்தை உடையவரும்; சந்திரனைச் சடையிலே தரித்தவரும்; பரிசுத்தமானவரும்; கயிலை மலையை உடையவரும் சுயம்புவமான பரமசிவனுடைய குருநாதனே!  சிலம்பை அணிந்த, மலர்ந்த கமலத்தைப் போன்ற திருவடித் தாமரைகளை உடையவனே!  வெள்ளிகரம் என்னும் தலத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

பிரமன் எழுதிவைத்த விதியின்படி நடக்கின்ற ஐந்து புலன்களும்; சுவை, ஒளி, தொடு உணர்ச்சி, ஓசை, நாற்றம் எனும் ஐந்துவகை உணர்ச்சிகளும் நெருங்கி வேலை செய்கின்ற இந்த உடலைச் சுமந்தபடி அனுதினமும்,

கலகங்களைச் செய்து துன்பத்தில் தள்ளுகின்ற ஐந்து புலன்களால் மனத்திண்மை உடைந்து, தடுமாறுபவனாகிய அடியேனுடைய மனம் வாக்கு காயம் எனப்படும் மூன்றும் உலக மயக்கங்களிலே ஈடுபட்டு உழலும் நிலை அழியவும்; நான் எனது என்ற கட்டுகள் ஒழியவும், உன்னுடைய திருவடிக்ளைப் பெறவும், மோன நிலையின் எல்லையிலே நிற்பதற்கான உபதேசமொழியை மொழிந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.