முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 302

உத்தரமேரூர் திருத்தலத்துக்கான இந்தப் பாடல் ஆறுமுகங்களையும் பன்னிரு தோள்களையும் போரில் வென்றதாகிய வடிவேலையும் நினைத்து தியானிப்பதைக் கோருகிறது. 

Updated On : 14 ஜூலை, 2016 at 1:22 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:12 PM

உத்தரமேரூர் திருத்தலத்துக்கான இந்தப் பாடல் ஆறுமுகங்களையும் பன்னிரு தோள்களையும் போரில் வென்றதாகிய வடிவேலையும் நினைத்து தியானிப்பதைக் கோருகிறது. 

அடிக்கு 28 எழுத்துகள்; ஒவ்வொரு நான்காம் எழுத்தும் (தோலெலும்பு என்பதில் நான்காம் எழுத்து; அடுத்த சீரில் நான்காம் எழுத்து, இப்படி.) மெல்லின ஒற்று. 

தானதந்த தானதந்த தானதந்த தானதந்த
      தானதந்த தானதந்த                 தனதான

தோலெலும்பு சீநரம்பு பீளைதுன்று கோழைபொங்கு
         சோரிபிண்ட மாயுருண்டு         வடிவான
      தூலபங்க காயம்வம்பி லேசுமந்து நான்மெலிந்து
         சோருமிந்த நோயகன்று          துயராற
ஆலமுண்ட கோனகண்ட லோகமுண்ட மால்விரிஞ்ச
         னாரணங்க ளாகமங்கள்          புகழ்தாளும்
      ஆனனங்கள் மூவிரண்டு மாறிரண்டு தோளுமங்கை
         யாடல்வென்றி வேலுமென்று     நினைவேனோ
வாலசந்த்ர சூடிசந்த வேதமந்த்ர ரூபியம்பை
         வாணிபஞ்ச பாணிதந்த           முருகோனே
      மாயையைந்து வேகமைந்து பூதமைந்து நாதமைந்து
         வாழ்பெருஞ்ச ராசரங்க           ளுரைவோனே
வேலையன்பு கூரவந்து ஏகதந்த யானைகண்டு
         வேடர்மங்கை யோடியஞ்ச        அணைவோனே
      வீரமங்கை வாரிமங்கை பாரின்மங்கை மேவுகின்ற
         மேருமங்கை யாளவந்த          பெருமாளே.

Advertisement

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273617104&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.