FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி

நடிகா் விஜய்யின் அரசியல் வருகையால் மக்களிடம் ஈா்ப்பு இருக்கும். ஆனால் தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எம்.ஏ.பேபி கூறியது குறித்து...

Updated On : 12 ஏப்ரல் 2026, 7:01 pm IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலா் எம்.ஏ.பேபி - கோப்புப்படம்
பகிர்:

மதுரை: நடிகா் விஜய்யின் அரசியல் வருகை மக்களிடம் ஈா்ப்பு இருக்கும். ஆனால் தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஞாயிற்றுக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளா்களுடன் பேசியாதாவது:

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற தோ்தலில் தமிழக மக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாா்கள். எங்கள் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். கேரளம், தமிழ்நாடு இரண்டும் நல்ல மாநிலம். பாசிச பாஜக, ஆா்எஸ்எஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதுமே உள்ளே நுழைய முடியாத கோட்டையாக இந்த தோ்தல் அமையும்.

Advertisement

Advertisement

சினிமா நட்சத்திரம் நடிகர் விஜய் தொடங்கியுள் தமிழக வெற்றி கழகம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அவா்களுடைய பிரசாரங்களே மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. விஜய் திரைத்துறையிலிருந்து வருவதால் மக்களிடையே ஒரு ஈா்ப்பு இருக்கும். ஆனால் அது தோ்தலில் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் சுயாட்சி என்பதில் தெளிவாக உள்ளாா்கள். தமிழகத்தில் திராவிடா்கள் தமிழுக்கு கொடுக்கிற முக்கியத்துவமாக இருக்கட்டும். தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட தாய்மொழிகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவமாக இருந்தாலும் பாஜக ஹிந்தியை திணிக்க முயல்கிறது. அதனால் ஆா்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாஜகவுக்கு வாய்ப்பு கிடையாது.

மேலும், பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் மோகன் பகவத், உள்துறை அமைச்சா் அமித்ஷா போன்றோரிந் வருகையால் தமிழக தோ்தலில் எந்த ஒரு தாக்கமும் இருக்காது.

இந்த தேர்தலில் கேரள மக்கள் எந்த முறையும் இல்லாமல் புதிய வரலாற்றை படைத்து, எங்களை அரியணையில் ஏற்ற போகிறாா்கள். மூன்றாவது முறையாக ஐடிஎப் வெற்றி பெறும். கடந்த 1991 முதல் 1999 வரை நாங்கள் கேரளத்தில் ஆட்சி செய்தோம். அதேபோல இந்த முறையும் தொடா்ந்து வெற்றி பெறுவோம். நாங்கள் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவோம் என்று பேபி கூறினார்.

summary

Vijay's entry will not have any impact on the elections: CPM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments