பகுதி - 303
இளம்பிறையைச் சூடிய சிவபெருமானும்; வேத மந்திரங்களையே தன் வடிவமாகக் கொண்டவளும், கலைவாணியைத் தன்னில் ஒருகூறாகக் கொண்டவளும், ஐந்து மலர்க்
பதச் சேதம் | சொற் பொருள் |
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான Advertisement
| சீ: சீழ்; துன்று: நெருங்கும், திரளும், அடைத்துக்கொள்ளும்; சோரி: இரத்தம்; பிண்டம்: உருண்டை; |
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற
| தூல: ஸ்தூல, கண்ணுக்குத் தெரிகின்ற (எதிர். சூக்கும, கண்ணுக்குத் தெரியாத) பருத்த என்றும் பொருள்; பங்க: பாவத்துக்கு இடம் தருகின்ற; காயம்: உடல்; சோரும்: சோர்ந்து, மெலிவுற்று; நோய்: பிறவி நோய்; |
ஆலம் உண்ட கோன் அகண்ட லோகம் உண்ட மால் விரிஞ்சன் ஆரணங்கள் ஆகமங்கள் புகழ் தாளும் | ஆலம்: நஞ்சு; அகண்ட: துண்டுபடாத, முழுமையான (கண்டம்: கூறுபட்டது, அ-கண்டம்: கூறுபடாதது); விரிஞ்சன்: பிரமன்; |
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ
| ஆனனங்கள்: ஆனனம்—முகம், முகங்கள்; ஆடல்: போர்; |
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே
| வால: பால; வாலசந்த்ர: பிறைச் சந்திரனை; சந்த வேத மந்த்ரம்: சந்தம் என்பதற்கு அழகு என்றொரு பொருள், சந்தஸ் உடையதாகிய வேத மந்த்ரம் என்பதும் பொருள்; பஞ்சபாணி: ஐந்து மலர்க் கணைகளைக் கையில் உடையவள்; |
மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே
| மாயை ஐந்து முதலானவற்றுக்கு விளக்கத்தில் காண்க; சராசரம்: சர, அசரம்—அசைவன, அசையாதன; |
வேலை அன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே
| வேலை: வேளை; ஏகதந்த யானை: ஒற்றைக் கொம்பு உள்ள விநாயகர்; |
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே.
| வீரமங்கை: வீரலக்ஷ்மி; வாரி மங்கை: பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி; பாரின் மங்கை: பூதேவி; மேருமங்கை: உத்தரமேரூர் (உத்தர+மேரு+ஊர்: வடக்கேயுள்ள மேரு ஊர்—இதற்கான விளக்கத்தை நம் 202ம் தவணையில் காண்க); |

தோலெலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி... தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை, அடைத்துக்கொள்ளும் கபம், பொங்கியெழுகின்ற ரத்தம்,

பிண்டமாயுருண்டு வடிவான ... (இவை அத்தனையும் கலந்து ஒரு) உருண்டையாகத் திரண்டு வடிவத்தை அடைந்து,

தூல பங்க காய வம்பிலே சுமந்து நான்மெலிந்து ... பருமனானதும், பாவத்துக்கு இடந்தருவதுமான இந்த உடலை நான் வீணாகச் சுமந்து மெலிவடைந்து,

சோரு மிந்த நோய் அகன்று துயராற ... தளருகின்ற பிறவியான இந்த நோய் நீங்கி என் துயரங்கள் தீரும்படியாக;

ஆல முண்ட கோன் அகண்ட லோகமுண்ட மால் விரிஞ்சன் ... நஞ்சை உண்ட தலைவனான சிவனும்; பரந்த உலகங்களை உண்டவனான திருமாலும்; பிரமனும்;

ஆரணங்கள் ஆகமங்கள் புகழ்தாளும் ... வேதங்களும் ஆகமங்களும் புகழ்வதான உன் திருவடியையும்;

ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும் ...ஆறு திருமுகங்களையும்; பன்னிரு தோள்களையும்;

அங்கை யாடல் வென்றி வேலும் என்று நினைவேனோ ... உன்னுடைய அழகிய திருக்கரத்தில் விளங்குகின்ற வெற்றிவேலையும் என்றாவது நான் தியானிப்பேனா? (தியானிக்க அருள்புரிய வேண்டும்.)

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை... இளம்பிறையைச் சூடியவரான சிவனும்; சந்த நயங்களோடு கூடிய வேத மந்திரங்களே வடிவமாக அமைந்த அம்பிகையும்;

வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே ... கலைமகளைத் தன்னில் ஒருகூறாகக் கொண்டவளும்; ஐந்து மலர்க் கணைகளை* ஏந்தியவளுமான உமையம்மை அருளிய முருகா!

(* அம்பிகைக்குக் கரும்பு வில்லும் ஐந்து மலர்க் கணைகளும் உண்டு. “மனோரூபேக்ஷு-கோத3ண்டா3 பஞ்சதன்மாத்ர-ஸாயகா” என்பது லலிதா ஸஹஸ்ரநாமம். மனம் என்னும் கரும்புவில்லையும் பஞ்சதன்மாத்திரைகளான ஐம்புலன்களாகிய அம்புகளையும் ஏந்தியவள்.)

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து ... ஐந்து வகை மாயைகளும், ஐந்து வகை வேகங்களும், ஐம்பூதங்களும், ஐந்து வகை நாதங்களும்,

(தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம் என்று மாயை ஐந்து வகை. வேகம் ஐந்து என்பது: மனோவேகம், வாயுவேகம், ஒளி வேகம், ஒலி வேகம், அசுவ வேகம். வேகத்துக்கு வேறுவேறு பொருள் கொண்டு வேறுவேறு ஐம்பொருட்களை உரைப்பவர் உண்டு. பூதம் ஐந்து என்பது: ஆகாயம், நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவை, நாதம் ஐந்து என்பது: தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி (வெண்கலத்தால் ஆன தாளக் கருவிகள்: கைத்தாளம் [ஜாலரா], Cymbal போன்றவை), மிடற்றுக் கருவி—வாய்ப்பாட்டு, கொன்னக்கோல் போன்றவை) என ஐந்து.)

வாழ்பெருஞ் சராசரங்கள் உறைவோனே ... நிலவுவதான அசைகின்ற, அசையாத பொருட்களில் உறைகின்றவனே!

வேலை அன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு ... வேண்டிய சமயத்திலே மிகுந்த அன்போடு வந்த ஒற்றை மருப்பரான—தந்தத்தை உடையவரான—விநாயகப் பெருமானாகிய யானையைப் பார்த்து,

வேடர் மங்கை யோடி யஞ்ச அணைவோனே ... வேடகுலப் பெண்ணான வள்ளி அஞ்சிய சமயத்தில் அவளை அணைத்தவனே!

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற ... வீரலக்ஷ்மியும், பாற்கடலில் தோன்றியவளான லக்ஷ்மியும், பூமாதேவியும் வீற்றிருக்கின்ற,

மேரு மங்கை யாள வந்த பெருமாளே. ... உத்தரமேரூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

(உத்தர என்றால் வடக்கு. மேரூர் என்றால் மேரு ஊர் என்று பிரிந்து வடக்கேயுள்ள மேரு நகரம் எனப் பொருள்படுகிறது என்பதை இந்தப் பாடலால் அறிகிறோம். வடமேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே என்று உத்தரமேரூர் பாலசுப்பிரமணிய சுவாமியை அழைக்கிறார் என்று நம் 202ம் தவணையில் குறிப்பிட்டிருந்தோம்.)

சுருக்க உரை

இளம்பிறையைச் சூடிய சிவபெருமானும்; வேத மந்திரங்களையே தன் வடிவமாகக் கொண்டவளும், கலைவாணியைத் தன்னில் ஒருகூறாகக் கொண்டவளும், ஐந்து மலர்க் கணைகளை ஏந்தியவளுமான உமையம்மை அருளிய முருகனே! ஐந்து மாயைகளும், ஐந்து வேகங்களும், ஐம்பூதங்களும், ஐந்துவிதமான நாதங்களும் நிலவுவதான அசைகின்ற, அசையாத பொருட்களினுள்ளே உறைபவனே! தகுந்த சமயத்திலே தோன்றிய ஒற்றைக் கொம்பரான விநாயகமூர்த்தியைக் கண்டு அஞ்சிய வேடமகளான வள்ளியம்மையத் தழுவியவனே! வீர லக்ஷ்மியும் பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியும் பூமாதேவியும் வீற்றிருப்பதான உத்தரமேரூர்த் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே!

தோல், எலும்பு, சீழ், நரம்பு கோழை ரத்தம் அனைத்தும் ஒன்று திரண்டு உருவான பிண்ட உருண்டை, பருத்ததும் பாவத்துக்கு இடம்தருவதுமான உடலாக வளர்ந்து, இதை நான் சுமந்து திரிந்து தளர்ந்து மெலிவுறுகின்ற பிறவியாகிய நோய் முடிவுபெற வேண்டும். (அதற்கு)

விடமுண்ட கண்டனாகிய சிவபெருமானும் உலகுண்ட வாயனான திருமாலும் பிரமனும் வேதங்களும் ஆகமங்களும் புகழ்கின்ற உன்னுடைய திருவடிகளையும்; ஆறு திருமுகங்களையும்; பன்னிரு தோள்களையும்; போரில் வென்றதான வடிவேலையும் நான் எப்போதும் நினைத்துத் தியானிக்கும்படி அருளவேண்டும்.