பகுதி - 304
சண்பைப்பதி என்கிற சீகாழித் தலத்துக்கான இன்றைய பாடல் அகப்பொருளாகப் பாடப்பட்ட ஒன்று. ‘இந்தப் பெண்
சண்பைப்பதி என்கிற சீகாழித் தலத்துக்கான இன்றைய பாடல் அகப்பொருளாகப் பாடப்பட்ட ஒன்று. ‘இந்தப் பெண் துணையின்றித் தனிமையில் இருக்கிறாள்’ என்று மட்டும் சொல்கிறது. இப்படி அகத்துறையில் ஒரு பாடல் இயற்றப்பட்டால், அதன் உட்பொருள், ‘தனிமையில் உள்ள பெண்ணுக்கு நீ துணையாக வரவேண்டும். இவளைப் போலவே துணையின்றித் தனிமையில் வாடும் அடியவர்களுக்குத் துணையாக நிற்கவேண்டும்’ என்று கோருவதாய் விரித்துப் பொருள்கொள்வதே பொருந்தும்.
தந்தத்தன தானன தந்தத் தனதானா
சிந்துற்றெழு மாமதி அங்கித் திரளாலே
தென்றற்தரு வாசமி குந்துற் றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற் றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் பெருமாளே.
Advertisement
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273617842&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p><img src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" /></p>