பகுதி - 305
விஷ ஜ்வாலையாக ஜொலிக்கின்ற வேலை, கடல் கலங்கிப்போய் மங்கலாகக் காட்சியளிக்கும்படி வீசிப் போரிட்ட முருகா! சந்தக் கவிதைகளை பாடும்
பதச் சேதம் | சொற் பொருள் |
சிந்து உற்று எழு மா மதி அங்கி திரளாலே Advertisement
| சிந்து: கடல்; அங்கி: அக்கினி, அங்கித் திரள்: தீப்பிழம்பு; |
தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே

அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே
| அந்தி: மாலை; கங்குல் இரவு; |
அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள்

நந்து உற்றிடு வாரியை மங்க
| நந்து: சங்கு; வாரி: கடல்; |
நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்திப் பொரு வேளே

சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே
| இனியோனே: சுவை காண்பவனே |
சண்பைப் பதி மேவிய கந்தப் பெருமாளே.
| சண்பைப் பதி: சீகாழி |

சிந்து உற்று எழு மா மதி அங்கித் திரளாலே ... கடலை அடைந்து அங்கிருந்து எழுகின்ற அழகிய சந்திரன் வீசுகின்ற தீப்பிழம்பாலும்;

தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே ... (சந்தனக் காட்டில் நுழைந்த) தென்றல் (சந்தனத்தின் வாசத்தை வாரியெடுத்துக்கொண்டு வந்து) வீசுவதாலும்;

அந்திப் பொழுதாகிய கங்குல் திரளாலே ... மாலைப் பொழுது முடிந்து அதைத் தொடர்ந்து வருகின்ற இரவின் அடர்த்தியாலும்; (இருள் அடர்ந்திருப்பதால்)

அன்புற்று எழு பேதை மயங்கித் தனி ஆனாள் ... அன்பின் எழுச்சியை உடைய இந்தப் பேதைப்பெண் தனியாகத் துணையின்றி இருக்கிறாள்.

நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்திப் பொரு வேளே ... சங்குப் பூச்சிகள் பொருந்தியிருக்கின்ற கடலுடைய தோற்றம் கலங்கி மங்கலாக ஆகும்படியாக விஷத்தைப் போல சுடர்விடும் வேலை வீசிப் போரிட்ட அரசே!

சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே ... இனிய சந்தங்களால் அமைந்த கவிதைகளைப் பாடும் கவிஞர்ளுடைய சொல்லின் சுவையை உணர்பவனே!

சண்பைப் பதி மேவிய கந்தப் பெருமாளே. ... சண்பை எனப்படும் சீகாழித் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

விஷ ஜ்வாலையாக ஜொலிக்கின்ற வேலை, கடல் கலங்கிப்போய் மங்கலாகக் காட்சியளிக்கும்படி வீசிப் போரிட்ட முருகா! சந்தக் கவிதைகளை பாடும் கவிஞர்களுடைய சொல்லின் சுவையை உணர்பவனே! சீகாழியில் வீற்றிருக்கும் பெருமாளே!

கடலிலிருந்து உதித்த சந்திரன் நெருப்புப் பிழம்பாக உமிழ்கின்ற நிலவொளியாலும்; சந்தனக் காடுகளிலே திரிந்த தென்றல் வாரியெடுத்து வரும் நறுமணத்தாலும் அன்பின் எழுச்சியை உடைய இந்தப் பெண் தனிமையில் வாடுகிறாள். (இவள் தனிமையைத் தீர்க்க வேண்டும்.)

(நீயெறிந்த வேலின் விஷ ஜ்வாலையைப் போல சந்திரன் இவள்மீது நிலவைப் பொழிகிறது. இந்தப் பெண் தனியாகக் கிடக்கிறாள். சந்தக் கவிவாணர்கள் வைத்துள்ள உட்பொருளை ஆழ்ந்து சுவைப்பவனாகிய நீ, இதன் உட்பொருளையும் உணர்ந்து இவளுடைய வாட்டத்தைப் போக்கவேண்டும். இவளைப் போன்றே துணையின்றித் தனித்திருக்கும் அடியார்களின் துயரையும் போக்க வேண்டும்.)