முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 306

இன்றைய பாடலும் சீகாழித் தலத்துக்குரியது.  அடிக்கு இருபத்திரண்டு எழுத்துகளும், சந்த அமைப்பில் வல்லொற்றுகளையும் கொண்ட

Updated On : 15 ஜூலை, 2016 at 4:28 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:14 PM

இன்றைய பாடலும் சீகாழித் தலத்துக்குரியது.  அடிக்கு இருபத்திரண்டு எழுத்துகளும், சந்த அமைப்பில் வல்லொற்றுகளையும் கொண்ட பாடல்.  அற்பமான செல்வத்தைப் பெறுவதற்காக செல்வந்தர்களைப் பொய்மொழிகளால் துதித்துப் பாடுகின்ற இவர்களுடைய முன்னிலையில் நான் வெட்கி நிற்கிறேனே, என்னைக் கண்பார்த்தருள வேண்டும் என்று வேண்டுகிறது.  சீகாழிக்குக் கொச்சை என்றும் பெயரிருப்பது இப்பாடலால் தெரிகிறது.

தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
      தத்தனா தத்தனத்                தனதான

செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
         தெற்கிலூ தைக்கனற்             றணியாத
      சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
         சித்தம்வா டிக்கனக்               கவிபாடிக்
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
         கற்பதா ருச்செகத்                த்ரயபாநு
      கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
         கைக்குணான் வெட்கிநிற்         பதுபாராய்
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
         தப்ரதா பர்க்குமெட்               டரிதாய
      தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்
         தத்வரூ பக்கிரிப்                  புரைசாடிக்
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
         குத்துரா வுத்தபொற்              குமரோனே
      கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
         கொச்சைவாழ் முத்தமிழ்ப்        பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273792386&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.