முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 311

வள்ளியம்மையின் கரிய புருவமானது, மன்மதனுடைய வில்லைப் போல வளையவும்; அந்தப் புருவவில்லிலிருந்து புறப்பட்ட காமனுடைய ஐந்தாவதும்,

Updated On : 22 ஜூலை, 2016 at 4:06 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:30 PM

பதச் சேதம்

சொற் பொருள்

சொரியும் முகிலை பதும நிதியை சுரபி தருவை சமமாக

Advertisement

சொரியும் முகிலை: மழை பொழியும் மேகத்தை; பதும நிதி: சங்க நிதி, பதும நிதி எனப்படும் பெரும் நிதியங்கள்; சுரபி: காமதேனு; தரு: கற்பகத் தரு;

சொ(ல்)லியும் மனம் எள் தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகு உற்று இயல் வாணர்

சொலியும்: சொல்லியும்; சுமடர்: கீழ் மகன், அறிவிலி (விளக்கத்தில் உள்ள குறிப்பைப் பார்க்கவும்); இயல் வாணர்: இயற்றமிழ்ப் புலவர்கள்;

தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி

திருடி: கவர்ந்து; நெருடி: சற்றே மாற்றிப் போட்டு;

திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ

மருள்: மயக்கம் (திரியு மருள் என்பதைத் திரியும் மருள் என்றும் பிரிக்கலாம். திரியும் என்பதில் உள்ள ம், ‘மருள்’ என்று மகரத்தில் தொடங்கும் அடுத்த சொல்லுக்கு முன்னால் கெடும் என்பது விதி.); குவளை: குவளைப் பூ; சிகரி: திருத்தணிகை மலை; பகரப் பெறுவேனோ: தணிகை என்று உச்சரிக்கும் பேற்றைப் பெறுவேனோ;

கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல

புருவச் சிலை: புருவமாகிய வில்; கடையில் விடம் மெத்திய நீல: காமனின் ஐந்து பாணங்களில் கடைசியானதும், மயக்கத் தன்மையில் மிதமிஞ்சியதுமான நீலோற்பலம்; (தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோத்பலம் என்பவை மன்மதனின் ஐந்து பாணங்கள்);

கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு

கலைகள்: மான்கள் (கலைமான்); கானிற்கு: வள்ளிமலைக் காட்டுக்கு;

உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா

உரிய குமரிக்கு அபயம்: வள்ளியம்மையிடம் ‘அபயம்’ என்று; உபய: இரண்டு; சரணம்: திருவடி; வீழா: விழுந்து;

உழையின் மகளை தழுவ மயல் உற்று உருகும் முருக பெருமாளே.

உழை: மான்; உழையின் மகள்: வள்ளி;

சொரியும் முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் சமமாகச் சொ(ல்)லியும்... ‘மழை பொழியும் கார்மேகம்’ என்றும்; சங்க, பதும நிதிகளென்றும்; காமதேனு, கற்பக விருட்சம் என்றும் பலவற்றுக்குச் சமமாக உவமித்துப் பாடிய போதிலும்,

மனம் எள் (அத்)தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகு உற்று ... எள்ளத்தனையும் மனம் நெகிழ்ச்சியுற்று இரங்காதவர்களான அறிவற்றவர்களை அணுகி,

(சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்—பாரதி, புதிய ருஷியா)

இயல் வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவி பாடி ... இயல்தமிழ்ப் புலவர்கள் தேர்ந்தெடுத்துப் பாடியதான பழைய பாடல்களின் பகுதிகளை (அங்குமிங்குமாக) எடுத்துக்கொண்டு, அவற்றைச் சற்றே மாற்றிப் போட்டு,

திரியு மருள் விட்டு உனது குவளைச் சிகரி பகரப் பெறுவேனோ ... திரிகின்ற மயக்கத்தை ஒழித்து, குவளை மலர்கள் மலரும் உன்னுடை திருத்தணிகை மலையின் பெருமைகளை எடுத்துச் சொல்லக்கூடிய பேறு எனக்குக் கிடைக்குமோ? (கிடைக்க வேண்டும்.)

கரிய புருவச் சிலையும் வளைய ... வள்ளியம்மையின் வில்போன்ற கரிய புருவம் வளையவும்,

கடையில் விடம் மெத்திய நீலக் கடிய கணை பட்டு உருவ ... (மன்மதனுடைய தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோத்பலம் ஆகிய கணைகளில்) கடைசியானதும், வீரியம் நிறைந்ததுமான நீலோத்பலம் என்னும் மலர்க்கணையானது (அந்தப் புருவவில்லிலிருந்து புறப்பட்டு), உன்னைத் துளைத்து உருவிக்கொண்டு போகவும்,

வெருவிக் கலைகள் பல பட்டன கானிற்கு உரிய குமரிக்கு அபயம் என நெக்கு... அச்சம்கொண்ட மான்கள் பல திரியும் வள்ளிமலைக் காட்டுக்குச் சென்று, அந்தக் காட்டுக்கு உரியவளான வள்ளியம்மையிடம் ‘அபயம்’ என்று சொன்னபடி,

உபய சரணத்தினில் வீழா உழையின் மகளைத் தழுவ மயல் உற்று உருகு(ம்) முருகப் பெருமாளே. ... அம்மையின் இரண்டு பாதங்களிலும் விழுந்து, மான் பெற்றெடுத்த அந்த அம்மையைத் தழுவுவதற்கு மையலுற்று உருகி நிற்கின்ற முருகப் பெருமாளே!

சுருக்க உரை

வள்ளியம்மையின் கரிய புருவமானது, மன்மதனுடைய வில்லைப் போல வளையவும்; அந்தப் புருவவில்லிலிருந்து புறப்பட்ட காமனுடைய ஐந்தாவதும், வீரியம் நிறைந்ததுமான நீலோத்பலம் என்னும் மலர்க்கணை துளைத்து உருவிக்கொண்டு போகவும்; அச்சங்கொண்ட மான்கள் திரியும் வள்ளிமலைக் காட்டை அடைந்து, அம்மையின் பாதங்களில் ‘அபயம்’ என்று கூறிக்கொண்டு விழுந்து அவளைத் தழுவுவதற்கு மையல் கொண்டு உருகுகின்ற முருகப் பெருமாளே!

‘கார்மேகம்’ என்றும்; சங்க, பதும நிதிகளென்றும்; காமதேனுவென்றும்; கற்பக விருட்சமென்றும் நிகர்த்தவனே என்றெல்லாம் பாடினாலும் எள்ளளவும் இரங்காத அற்பர்களிடத்திலே சென்று, பழம்பெரும் புலவர்கள் தேர்ந்தெடுத்த சொற்களால் இயற்றிய பாடல்களிலிருந்து சில பகுதிகளைக் கவர்ந்தும், அவற்றை அங்குமிங்குமாக மாற்றியும் அவர்கள்மீது பாடல்களைப் பாடித்திரிகின்ற மயக்க நிலையை ஒழித்து, பெருமானே, உன்னுடைய ‘தணிகை’ மலையின் பெருமைகளை ஓதுகின்ற பேற்றை நான் அடையவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.