முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 312

திருவண்ணாமலைத் தலத்துக்கான இந்தப் பாடல் அகப் பொருளில் ‘நற்றாய் இரங்கல்’ என்ற துறையைச் சேர்ந்தது.  இப்படிப்பட்ட பாடல்களை இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம்.  ‘உன்மீது மோகம்

Updated On : 22 ஜூலை, 2016 at 4:12 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:31 PM

திருவண்ணாமலைத் தலத்துக்கான இந்தப் பாடல் அகப் பொருளில் ‘நற்றாய் இரங்கல்’ என்ற துறையைச் சேர்ந்தது.  இப்படிப்பட்ட பாடல்களை இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம்.  ‘உன்மீது மோகம் கொண்டுள்ள இந்தப் பெண்ணை நீ ஏற்றருள வேண்டும்’ என்ற தொனியில் பாடப்படும் இவ்வகைப் பாடல்களெல்லாமே—திருப்புகழில் இடம்பெறும்போது—அடியார்களை மோகங் கொண்ட பெண்ணாக உருவகித்து, அடியாரை ஆண்டருள வேண்டும் என்ற பொருளில் பாடப்பட்டவை. 

அடிக்கு ஒற்று நீக்கி இருபத்தைந்து எழுத்துகளாகவும்; ஒற்றைச் சேர்த்து 7, 15, 23 ஆகிய எழுத்துகள் வல்லொற்றாகவும் சீரான இடைவெளிகளில் நெடிலோசையும் பயிலும் பாடல். 

தானன தானதத்த தானன தானதத்த
      தானன தானதத்த                   தனதான

தேதென வாசமுற்ற கீதவி நோதமெச்சு
         தேனளி சூழமொய்த்த            மலராலே
      சீறும ராவெயிற்றி லூறிய காளம்விட்ட
         சீதநி லாவெறிக்கு                மனலாலே
போதனை நீதியற்ற வேதனை வாரிதொட்ட
         போர்மத ராஜனுக்கு              மழியாதே
      போகமெ லாநிறைத்து மோகவி டாய்மிகுத்த
         பூவையை நீயணைக்க            வரவேணும்
மாதினை வேணிவைத்த நாதனு மோதுபச்சை
         மாயனு மாதரிக்கு                மயில்வீரா
      வானவர் சேனைமுற்றும் வாழப ராபதிக்குள்
         வாரண மானதத்தை             மணவாளா
மேதினி யோர்தழைக்க வேயரு ணாசலத்து
         வீதியின் மேவிநிற்கு             முருகோனே
      மேருவை நீறெழுப்பி நான்முக னார்பதத்தில்
         வேலடை யாளமிட்ட             பெருமாளே.

Advertisement

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/274842291&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.