பகுதி - 314
இது திருவாஞ்சியம் தலத்துக்கான பாடல். இந்தப் பாடலில்தான் திருவேங்கடத்தைப் பற்றிய மிகமுக்கியமான குறிப்பொன்றை வைக்கிறார் குருநாதர்.
இது திருவாஞ்சியம் தலத்துக்கான பாடல். இந்தப் பாடலில்தான் திருவேங்கடத்தைப் பற்றிய மிகமுக்கியமான குறிப்பொன்றை வைக்கிறார் குருநாதர்.
அருணகிரியார் இயற்றிய திருவேங்கடத் திருப்புகழ்ப் பாக்களை ஆதாரமாகக் காட்டி, ‘திருப்பதியில் இருப்பவன் முருகனே’ என்று வாதிடுவோர் உண்டு. அவர்கள் இந்த வாதத்துக்கு யாரை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ, அந்த அருணகிரியாரே இந்தப் பாடலில், ‘உலகு ஈன்ற பச்சை உமை அ(ண்)ணன்; வடவேங்கடத்தில் உறைபவன்; உயர் சார்ங்க சக்ர கரதலன் மருகோனே’ என்று முருகனை விளிக்கிறார். உமைக்கு அண்ணனும், சங்கு, சக்கரம், சார்ங்கம் ஏந்தியவனும், வடவேங்கடத்தில் உறைபவனுமான திருமாலின் மருமகனே’ என்று விளிப்பதால் ஒன்று தெளிவாகிறது. திருமலையில் இருப்பவன் முருகன் என்ற கருத்தில் அருணகிரியார் பாடவில்லை; அவர் பாடிய திருவேங்கடப் பதியிலுள்ள முருகன் கோவில் வேறு. இந்தக் கருத்தை இதற்கு முன்னால் நம் 31ம் தவணையில் (நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்ற திருவேங்கடத் திருப்புகழைப் பேசுகையில்) குறிப்பிட்டுள்ளோம். இன்று அந்தப் பாடலைப் பார்ப்போம்.
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன தனதான
இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயம ணரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி மளலேபந்
தபனாங்க ரத்ந வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு வியபோது
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
தனவாஞ்சை மிக்கு னடிதொழ நினையாரே
உபசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன் ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண் முகவேலா
திரைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/274843226&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
Advertisement