முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 315

குருகுல வம்சத் தோன்றல்களான பஞ்ச பாண்டவர்களுக்கு வரமளித்தவனும்; கரிய நிறம் கொண்டவனும்; கீர்த்தி மிக்க நெடியவனும்; புலன்களை அடக்கிய ரிஷி கேசனும்;

Updated On : 22 ஜூலை, 2016 at 4:25 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:32 PM

பதச் சேதம்

சொற் பொருள்

இப மாந்தர் சக்ரபதி செறி படை ஆண்டு சக்ர வரிசைகள் இட வாழ்ந்து திக்கு விசய மண் அரசாகி

Advertisement

இபம்: யானை(ப் படை); மாந்தர்: காலாட் படை; சக்ர வரிசைகள்: ஆக்ஞா சக்கரம் முதலானவை;

இறுமாந்து வட்ட அணை மிசை விரி சார்ந்து வெற்றி மலர் தொடை எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம்

வட்ட அணை: வட்டமான மெத்தை; மலர்த் தொடை: மலர் மாலை; பட்டி வகை: துணி—ஆடை—வகைகள்; பரிமள: நறுமண; லேபம்: கலவைப் பூச்சு;

தபனம் அங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவிய போது

தபனன்: சூரியன்; தபனாங்க: சூரிய ஒளியைத் தன் உறுப்பாகக் கொண்ட; விச்சு: வித்து;

தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர் தன வாஞ்சை மிக்கு உன் அடி தொழ நினையாரே

தன வாஞ்சை: பொருளாசை;

உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன்

உபசாந்தம்: மன அமைதி; சித்த: உள்ள; குருகுல: Kuru வம்சத்து; மை உருவோன்: மைபோலக் கரிய உருவத்தன்; ப்ரசித்த: கீர்த்தியுடைய; நெடியவன்: திருமால்; ரிஷிகேசன்: இந்திரியங்களை வென்றவன்;

உலகு ஈன்ற பச்சை உமை அ(ண்)ணன் வட வேங்கடத்தில் உறைபவன் உயர் சார்ங்கம் சக்ர கரதலன் மருகோனே

அணன்: அண்ணன்; கரதலன்: கரத்தில் வைத்திருப்பவன்;

த்ரிபுர அந்தகற்கு வர சுத ரதி காந்தன் மைத்துன முருக திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா

த்ரிபுர அந்தகன்: திரிபுரங்களை எரி செய்த சிவன்; வர சுத: மேலான மகனே; ரதி காந்தன்: மன்மதன்;

திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள் தரு திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே.

திரை: அலை; பத்ம தட: தாமரைத் தடாகங்கள்; வயலி: வயலூர்;

இபமாந்தர் சக்ர பதி ...  யானைப் படை, காலாட்படை உள்ளிட்ட சதுரங்க சேனைகளை உடைய சக்ரவர்த்தியாகி;

செறி படையாண்டு ...  நிறைந்திருப்பதான நான்குவகையான சேனைகளையும் ஆண்டு;

சக்ர வரிசைகளிட வாழ்ந்து ... தன்னுடைய ஆணைச் சக்கரமானது அதனுடைய பணிகளை முறையாக நடத்த, இந்தவகையாக வாழ்ந்து;

திக்கு விசய மண் அரசாகி ...  திக்கு விஜயங்களை மேற்கொண்டு, இந்த பூமிக்கு அரசனாகி;

இறுமாந்து வட்ட வணைமிசை ...  இறுமாப்பு எய்தி, வட்ட வடிவமான மெத்தையின் மேலுள்ள,

விரிசார்ந்து... விரிப்பிலே சாய்ந்துகொண்டு,

வெற்றி மலர்தொடை எழிலார்ந்த பட்டிவகை பரிமள லேபம் ... வெற்றியைக் குறிப்பதான (வாகை) மலர் மாலையும்; அழகான ஆடை வகைகளும்; நறுமணக் கலவைப் பூச்சுகளும்;

தபனாங்க ரத்ந அணிகலன் ... சூரியனுடைய ஒளியைத் தன்னிடத்திலே கொண்டவையும், ரத்தினங்களால் ஆனவையுமான ஆபரணங்களும்;

இவைசேர்ந்த விச்சு வடிவது ... என இத்தனை விதமான (ஆள் அம்பு சைனியம்) போகங்கள் சூழ்ந்திருந்தாலும், (அங்கே இருப்பது என்னவோ ஒரு மனிதன் என்றோ விதைத்த) விதை (வளர்ச்சியடைந்ததன்) வடிவம்தான்.  (அரசனாகவே இருந்தாலும் அவனுடையதும் இன்னொரு மனித உடல்தான்.)

தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழுவியபோது ... தன் உற்றார் உறவினர்கள் சூழ்ந்திருக்கும் போதே, உடலிலிருந்து உயிர் நழுவி விடைபெற்றுச் செல்கின்றபோது,

தழல்தாங் கொளுத்தியிட ... அந்த உடலை நெருப்பிலே இட்டுச் சுட்டதும் (மிஞ்சுவது),

ஒரு பிடிசாம்பல் பட்டது அறிகிலர் ...  அந்த உடலும் ஒருபிடி சாம்பல் என்ற நிலையைத்தான் அடையும் என்பதை யாரும் உணர்வதில்லை.

தனவாஞ்சை மிக்கு உனடிதொழ நினையாரே ... (அதனாலே) பொருள்மீது ஆசையை வைத்து, உன் திருவடிகளைத் தொழவேண்டும் என்ற நினைப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள்.

உபசாந்த சித்த குருகுலபவ ... மனத்தில் அமைதி உடையவர்களும், குருகுலத்தில் பிறந்தவர்களுமான,

பாண்டவர்க்கு வரதன் ... ஐந்து பாண்டவர்களுக்கு வரங்களைத் தந்தவனும்;

மை உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன் ...  மைபோலக் கரிய நிறத்தைக் கொண்டவனும்; கீர்த்தியுள்ளவனும்; நெடியோனான திருமாலும்; புலன்களை வென்றவனும்;

உலகீன்ற பச்சை யுமையணன் ... உலகத்தின் அன்னையும்; பச்சை நிறங்கொண்டவளுமான உமாதேவியின் அண்ணனும்;

வடவேங்க டத்தி லுறைபவன் ...  வடவேங்கடத்தில் வீற்றிருப்பவனும்;

உயர்சார்ங்க சக்ர கரதலன்மருகோனே ...  உயர்ந்ததாகிய சார்ங்கம் என்ற வில்லையும், சுதர்சனச் சக்கரத்தையும் கைகளில் ஏந்தியுள்ள திருமாலின் மருமகனே!

த்ரிபுராந்த கற்கு வரசுத ... திரிபுரங்களுக்கு யமனாக விளங்கி அவற்றை அழித்த சிவனாருடைய மேலான பிள்ளையே!

ரதிகாந்தன் மைத்துனமுருக ... ரதியின் துணைவனான மன்மதனுக்கு மைத்துனனே!  முருகனே!

(பிரமனும் மன்மதனும் திருமாலிடத்திலே தோன்றிவயர்களாதலால், முருகனுக்கு மாமன் மகன்கள் ஆகிறார்கள்)

திறல்பூண்ட சுப்ர மணிய ஷண்முகவேலா ... வல்லமை நிறைந்த சுப்பிரமணியா!  ஷண்முகா!  வேலா!

திரைபாய்ந்த பத்மதட வயலியில்வேந்த ... அலைகள் பாய்கின்ற தாமரைத் தடாகங்கள் நிறைந்த வயலூரின் அரசே!

முத்தி யருள்தரு திருவாஞ்சியத்தில் ... முக்தியளிக்கும்* தலமான திருவாஞ்சியத்தில் வீற்றுள்ளவனே

அமரர்கள் பெருமாளே. ... தேவர்களுடைய பெருமாளே

(* தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருவாஞ்சியம் ஆகிய தலஙகள் முக்தித் தலமாக அறியப்படுகின்றன.)

சுருக்க உரை

குருகுல வம்சத் தோன்றல்களான பஞ்ச பாண்டவர்களுக்கு வரமளித்தவனும்; கரிய நிறம் கொண்டவனும்; கீர்த்தி மிக்க நெடியவனும்; புலன்களை அடக்கிய ரிஷி கேசனும்; உலக மாதாவான உமையம்மைக்கு அண்ணனும்; வடவேங்கடத்தில் உறைபவனும்; சங்கு, சக்கரம், சார்ங்க வில் ஆகியவற்றைக் கையில் ஏந்தியவனுமான திருமாலின் மருகனே!  முப்புரங்களை அழித்தவரான சிவனாருடைய மேன்மையுள்ள மகனே!  மன்மதனுடைய மைத்துனனே!  முருகனே!  பராக்ரமம் நிறைந்த சுப்பிரமணியனே!  ஷண்முகனே!  வேலனே!  அலைகள் பாயும் தாமரைத் தடாகங்களைக் கொண்ட வயலூரின் அரசே!  முக்தியைத் தருவதான திருவாஞ்சியத்தில் வீற்றிருப்பவனே!  தேவர்கள் பெருமாளே!

யானை, தேர், குதிரை, காலாள் என்று நான்குவிதமான சேனைகளையும் உடையவனாய் இருந்து; சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து;  எங்கும் பரவும் தன் ஆணைச் சக்கரத்தை நிலைநிறுத்தி; பெருமிதம் கொண்டு; சூரியனைப் போல ஒளிவிடும் ரத்தினங்களால் அமைந்த மாலைகளை அணிந்துகொண்டு; வட்டமான மெத்தையின்மேல் விரிக்கப்பட்ட விரிப்பில் சாய்ந்துகொண்டு; வெற்றி மாலைகளையும் அழகான ஆடைகளையும் அணிந்துகொண்டும், நறுமணக் கலவைப் பூச்சைப் பூசிக்கொண்டும் ஒருவன் பேரரசாகவே திகழ்ந்த போதிலும், அவனும் ஒரு மனிதன் விதைத்த விதை முளைத்து, வளர்ச்சிபெற்ற இன்னொரு மனித வடிவம்தான்; உடல்தான்.

சூழ்ந்திருக்கும் உறவினர்களெல்லோரும் பார்த்திருக்கும் போதே உயிர் பிரிந்ததும், அவ்வுடலைத் தீயிலிட்டால் மிஞ்சப் போவது ஒருபிடி சாம்பல்தான் என்பதை யாரும் உணருவதில்லை.  (செல்வமும் யாக்கையும் நிலையாமையை உணர்ந்து உன் பாதங்களை மனத்தில் ஆழ ஊன்றும் வரமருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.