பகுதி - 318
பட்டாலியூர் என்ற திருத்தலத்துக்கான பாடலிது. இது ‘பட்டாலி சிவமலை’ என்றும் வழங்கப்படுகிறதென்றும், ஈரோடு—திருப்பூர்
பட்டாலியூர் என்ற திருத்தலத்துக்கான பாடலிது. இது ‘பட்டாலி சிவமலை’ என்றும் வழங்கப்படுகிறதென்றும், ஈரோடு—திருப்பூர் சாலையிலுள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது என்றும் தெரிய வருகிறது. அடிக்கு (ஒற்றொழித்து) 34 எழுத்துகள் உள்ள இப்பாடலில் (ஒற்று உட்பட) 2, 12, 22 ஆகிய எழுத்துகள் வல்லொற்றுகள். ‘அடர்வன’, ‘அறவேபார்’ என்ற இரண்டிடங்களில் ரகர மெய் (ர்) பயில்கிறது. இடையின ஒலிகள் தாளத்தின் போக்கை மாற்றாதவை. இந்த இரண்டிடங்களைத் தவிர்த்து மற்ற எங்கும் இடையின அல்லது மெல்லின மெய்கள் பயிலவே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.
வயதேறியபின், உடல் தளர்ந்தபின் இறைவனின் நினைப்பு எழுவது பெரும்பாலும் இயல்பான ஒன்றுதான். ஆனால், ‘இளமைப் பருவம் இருக்கின்றபோதே உன் அடியவனாக மாறித் தொண்டாற்றும் பேறு கிடைக்க வேண்டும்’ என்று கோருகிறது பாடல்.
தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
தத்தான தனன தனதன தனதான
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
கற்பூர களப மணிவன மணிசேரக்
கட்டார வடமு வடர்வன நிட்டூர கலக மிடுவன
கச்சோடு பொருது நிமிர்வன தனமாதர்
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
கொற்சேரி யுலையில் மெழுகென வுருகாமே
கொக்கா நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
குற்றேவல் அடிமை செயும்வகை யருளாதோ
அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
லச்சான வயலி நகரியி லுறைவேலா
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
டக்காகி விரக பரிபவ மறவேபார்
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
பற்றாய பரம பவுருஷ குருநாதா
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
பட்டாலி மருவு மமரர்கள் பெருமாளே.
Advertisement
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/275893971&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /><br /> </p>