பகுதி - 278
கொங்கு நாட்டில் காங்கேயத்துக்கு அருகிலுள்ள பட்டாலியூர் என்ற தலத்துக்கான பாடல் இது. ‘எனக்கு இந்தச் சமய ஞானமும்
கொங்கு நாட்டில் காங்கேயத்துக்கு அருகிலுள்ள பட்டாலியூர் என்ற தலத்துக்கான பாடல் இது. ‘எனக்கு இந்தச் சமய ஞானமும் சாத்திர விவாதங்களும் சண்டைகளும் போதும் போதும் (அலமலம்). இப்படிப்பட்ட வீணான வழிகளில் நான் அகப்பட்டுக் கொள்ளாமல் எனக்குப் பரகதியைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டுகிறது.
இந்தப் பாடலில் இடம்பெறும் பல சொற்கள் அண்மைக் காலம் வரையிலும், இன்னமும்கூட பேச்சு வழக்கிலும் இலக்கிய ஆட்சியிலும் காணப்பட்ட சொற்கள். உதாரணமாக சங்கை என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், ‘சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு சங்கையில் லாதன சங்கையாம்’ என்று பாரதி கண்ணன் – என் சற்குருவில் பாடியிருக்கிறான். சங்கையென்றால் சந்தேகம் என்றொரு பொருள்; கணக்கு என்றொரு பொருள். சாத்திரங்களில் கணக்கற்றவை சந்தேகத்துக்குரியவை என்று இரண்டு பொருளிலும் பாரதி ஆண்டிருக்கிறான். ‘சிலுகிடு’ என்ற சொல் ‘சிலுகு’ என்று பேச்சு வழக்கில் அண்மைக் காலம் வரை வழங்கி வரப்பட்ட ஒன்று ‘எதுக்கு இப்படி சிலுகு வளக்கற?’ என்று கேட்பார்கள். ‘குனகுதல்’ என்றால் கொஞ்சிப் பேசுதல் என்று பொருள்.
இந்த வளமான மொழியின் சொல்வளம் அருகிச் சிதைந்து கொண்டே வருகிறது. இந்த வளங்களை நினைவுறுத்தவும் மீட்கவும் இன்றைய பாடலைப் போன்றவை உதவுகின்றன.
Advertisement
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
தந்தத்தத் தான தனதன தனதான
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
சங்கற்பித் தோதும் வெகுவித கலைஞானச்
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
சம்பத்துக் கேள்வி யலமல மிமவானின்
மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
வந்திக்கப் பேசி யருளிய சிவநூலின்
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
வம்பிற்சுற் றாது பரகதி யருள்வாயே
வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் மருகோனே
வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை வயலூரா
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
கொண்டைக்கொப் பாகு முகிலென வனமாதைக்
கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
கொங்கிற்பட் டாலி நகருறை பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270001393&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>