முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 281

இந்த ஆட்டை அடக்குவேன்’ என்று) சபதம் செய்து குதித்துத் தாண்டி ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்துபவனே! (ஆட்டுவாகனத்தைப் பற்றி அடிக்குறிப்பில் காண்க

Updated On : 21 ஜூன், 2016 at 3:16 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:03 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அவசியம் உன் பல காலும் வேண்டி

Advertisement

அவசியம்: இன்றியமையாத; (பொருள் காணும்போது அவசியம் பலகாலும் உன்வேண்டி என்று கூட்டிக் கொள்க); உன்வேண்டி: உன்னை வேண்டி; வேண்டி: பிரார்த்தித்து;

அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில்

தவ செபமும் தீண்டி கனிவாகி

தீண்டி: மேற்கொண்டு;

சரணம் அது பூண்டற்கு அருள்வாயே

பூண்டற்கு: பூணுவதற்கு;

சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய்

சவதமொடும்: சபதமொடும், சபதத்தோடு, சூளுரைத்து; தகர்: ஆடு; ஊர்வாய்: (வாகனமாய்ச்) செலுத்துவாய்;

சடு சமயம் காண்டற்கு அரியோனே

சடு சமயம்: ஆறு சமயங்கள்; காண்டற்கு: காண்பதற்கு;

சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே

ஈண்டில்: நெருங்கினால்; பெயரோனே: பெயராதவனே, நீங்காதவனே;

திரு முருகன் பூண்டி பெருமாளே.

அவசியம் பலகாலும் உன்வேண்டி... உன்னை வழிபடுவதன் அவசியத்தைப் பலகாலமாக (அறிந்து), உன்னைப் பிரார்த்தித்து,

அறிவினுணர்ந்து ஆண்டுக்கொரு நாளில் ... என் அறிவில் உன்னை உணர்ந்து, ஆண்டுக்கு ஒருநாளிலேனும்,

தவசெபமுந் தீண்டிக் கனிவாகி ... தவநெறியையும் ஜெபமுறையும் மேற்கொண்டு உள்ளம் கசிந்துருகி,

சரணமதும் பூண்டற்கு அருள்வாயே ... உன்னுடைய திருவடிகளை என்னுடைய அகத்தில் (மனத்தில்) பூண்டு தரிப்பதற்கு நீ அருள வேண்டும்.

சவதமொடுந் தாண்டித் தகர் ஊர்வாய் ... (இந்த ஆட்டை அடக்குவேன்’ என்று) சபதம் செய்து குதித்துத் தாண்டி ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்துபவனே! (ஆட்டுவாகனத்தைப் பற்றி அடிக்குறிப்பில் காண்க)

சடுசமயங் காண்டற்கு அரியானே ... ஆறுவகையான சமயங்களாலும் கண்டு உணர்வதற்கு முடியாதவனே!

சிவகுமர அன்பு ஈண்டிற் பெயரானே ... சிவகுமாரனே, அன்புகொண்டு உன்னை நெருங்குபவர்களை ஒருக்காலும் பிரியாதவனே!

திருமுருகன் பூண்டிப் பெருமாளே. ... திருமுருகன்பூண்டியில் வீற்றிருக்கும் பெருமாளே.

முருகன் ஆட்டுவாகனமேறியது:

நாரதர் செய்த வேள்வியில் ஒரு முரட்டு ஆடு தோன்றியது.  அதை அடக்க முடியவில்லை.  வீரபாகுவை அனுப்பி அதைப் பற்றிக்கொண்டு வரச் செய்த கந்தன், அதை அடக்கினான்.  பின்னர் அதையே வாகனமாகக் கொண்டான்.  இது கந்த புராணம், உற்பத்திக் காண்டம், தகரேறு படலத்தில் சொல்லப்படுகிறது.  பால லீலைகளுள் ஒன்று.

என்னலுந் தகரை அற்றே யானமாக் கொள்வம் பார்மேல்
முன்னிய மகத்தை நீவிர் முடித்திரென் றருள யார்க்கும்
நன்னய மாடல் செய்யும் நாரதன் முதலோர் யாரும்
அன்னதோர் குமர னெந்தை அடிபணிந் தருளாற் போந்தார்

(இந்த ஆட்டை வாகனமாகக் கொள்ள வேண்டும் என்று நாரதர் முதலானோர் கேட்டுக் கொள்ள) ‘அப்படியே இந்த ஆட்டை வாகனமாக் கொள்கிறோம்.  நீங்கள் தொடங்கிய வேள்வியை முடியுங்கள்’ என்று கந்தன் சொல்ல, நாரதன் முதலானோர் அவனடி பணிந்து சென்றார்கள்.  தகர்: ஆடு; யானம்: வாகனம்; மகம்: வேள்வி;)

சுருக்க உரை

‘இந்த ஆட்டை அடக்குவேன்’ என்று சூளுரைத்து அதை உன் வாகனமாக்கிக் கொண்டு செலுத்துபவனே! ஆறு சமயங்களாலும் கண்டு உணர அரியவனே! சிவகுமாரனே! அன்புகொண்டு நெருங்குபவரை என்றும் பிரியாதவனே! திருமுருகன்பூண்டியில் உறைபவனே!

உன்னைப் பணிவதன் அவசியத்தை உணர்ந்து, பலமுறை துதித்து, என் அறிவால் உன்னை உணர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறையேனும் முறையான தவநெறி, ஜெபமுறைகமள மேற்கொண்டு மனமுருகி உன் திருவடியை என் உள்ளத்துள்ளே தரிப்பதற்கு அருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.