முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 282

வெள்ளியங்கிரி எனப்படும் திருக்கயிலாயத் தலத்துக்கான பாடல் இது.  பல பாடல்களில் வெளிப்பட்டிருப்பது போலவே இப்பாடலிலும் பரமசிவனாரிடத்தில்

Updated On : 21 ஜூன், 2016 at 3:24 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:04 PM

வெள்ளியங்கிரி எனப்படும் திருக்கயிலாயத் தலத்துக்கான பாடல் இது.  பல பாடல்களில் வெளிப்பட்டிருப்பது போலவே இப்பாடலிலும் பரமசிவனாரிடத்தில் அருணகிரியாருக்கு உள்ள பக்தி அழகாக வெளிப்படுகிறது.  முதலடியின் இறுதியில் ‘சீவன் சிவச் சொரூபம் எனத் தேறி’ என்கிறார்.  இதைத்தான் திருமூலர்,

சீவ னெனச்சிவ னென்னவே றில்லை
சீவ பார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை யறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டிங் கிருப்பரே

(திருமந்திரம் 1979)  என்கிறார்.

Advertisement

பாடலில் அடிக்கு ஒற்றொழித்து இருபத்தைந்து எழுத்துகள்; (ஒற்று உட்பட) மூன்று, பன்னிரண்டு, இருபத்தொன்று ஆகிய எழுத்துகள் மெல்லின மெய்; ஆறு, பதினைந்து, இருபத்து நான்கு ஆகிய எழுத்துகள் வல்லின மெய்.  ‘ஞானம் பெருகி எழ, மகிழ்ச்சி தரும் ஆனந்தசித்தியை அடைநது நாள்தோறும் உன்னுடைய திருவடிகளை அருளவேண்டும்’ என்று கோருகிறது பாடல்.

தானந்த னத்ததன தானந்த னத்ததன
      தானந்த னத்ததன                   தனதான

தேனுந்து முக்கனிகள் பால்செங்க ருப்பிளநிர்
         சீரும்ப ழித்தசிவ                 மருளூரத்
      தீரும்பி டித்தவினை யேதும்பொ டித்துவிழ
         சீவன்சி வச்சொருப               மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
         நாதம்ப ரப்பிரம                  வொளிமீதே
      ஞானஞ்சு ரப்பமகி ழாநந்த சித்தியொடெ 
         நாளும்க ளிக்கபத                மருள்வாயே
வானந்த ழைக்கஅடி யேனுஞ்செ ழிக்கஅயன்
         மாலும்பி ழைக்கஅலை           விடமாள
      வாருங்க ரத்தனெமை யாளுந்த கப்பன்மழு
         மானின்க ரத்தனருள்             முருகோனே
தானந்த னத்ததன னாவண்டு சுற்றிமது
         தானுண்க டப்பமல               ரணிமார்பா
      தானங்கு றித்துஎமை யாளுந்தி ருக்கயிலை
         சாலுங்கு றத்திமகிழ்              பெருமாளே.

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270149707&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.