பகுதி - 228
இன்றைய திருவண்ணாமலைத் திருப்புகழ், மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒன்று. நாராயணனைப் பாடுவதைப் போலவே, நாராயணியைப் பாடுவதென்றாலும் அருணகிரியாருக்கு உலகம் மறந்துவிடும்.
இன்றைய திருவண்ணாமலைத் திருப்புகழ், மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒன்று. நாராயணனைப் பாடுவதைப் போலவே, நாராயணியைப் பாடுவதென்றாலும் அருணகிரியாருக்கு உலகம் மறந்துவிடும்.
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றுவன்வந் தாலென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியாம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரம கல்யாணிதன் பாலகனே.
என்று அபிராம பட்டரே பாடாத விதத்தில் கந்தரலங்காரத்தில் பாடியவர் அவர். இறைவன் இறைவியைத் தன் இடப்பாகத்தில் வைத்ததாகத்தான் அனைவரும் பாடுவார்கள். இதில் இறையவன் உடையவன்; இறைவி உடைமைப் பொருள் என்ற பாவம்தான் தென்படும். மிகமிக அரிதிலும் அரிதாய்ப் பாடுகிறார் அருணகிரியார்: ‘த்யாகப் பொருப்பை… பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி’. இறைவி உடையவளாகிறாள், இறைவன் உடைமையாகிறான்! இந்தப் பாடலில் வந்துவிழும் அம்பிகையின் திருநாமங்களையும் குணங்களையும் பாருங்கள்.
Advertisement
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன தனதான
அமுத மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி னருள்தாராய்
குமரி காளிவ ராகிம கேசுரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய சூலிசு டாரணி யாமளி மகமாயி
குறளு ரூபமு ராரிச கோதரி
யுலக தாரிஉ தாரிப ராபரி
குருப ராரிவி காரிந மோகரி அபிராமி
சமர நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரிணி
சலில மாரிசி வாயம னோகரி பரையோகி
சவுரி வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை யருள்பாலா
திமித மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண விடும்வேலா
திருவு லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுவி மானந வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/261630441&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>