முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 232

குற்றாலத்துக்குத் தெற்கேயுள்ள திருவீழிமிழலைத் தலத்துக்கான இப்பாடல் அன்பர்களிடையே பிரசித்தி பெற்ற ஒன்று.  ‘மொய்தா ரணிகுழல் வள்ளியை

Updated On : 4 மே, 2016 at 3:06 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:41 PM

குற்றாலத்துக்குத் தெற்கேயுள்ள திருவீழிமிழலைத் தலத்துக்கான இப்பாடல் அன்பர்களிடையே பிரசித்தி பெற்ற ஒன்று.  ‘மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்' என்று வாழ்த்திய அந்த தெய்வத்தை, ‘முருகா என ஓர்தரம் ஓது அடியார் முடிமேல் இணைதாள் அருள்வோன்’ என்று வாழ்த்துகிறார்.  ஒருபிறவிக்கு ஒருதாய் என்றால், ‘ஒருதாய் இருதாய், பலகோடியதாய்’ நான் கோடானு கோடிமுறை வீணே பிறந்துபிறந்து வெற்றாக இறந்திறது ஒழியாமல் காக்க வேண்டும்’ என்று வேண்டுகிறார்.  ‘முருகா’ என்று ஓதும் பேற்றை வேண்டுகிறது பாடல். 

தனனா தனனா தனனா தனனா
                 தனனா தனனா                      தனதான

எருவாய் கருவாய் தனிலே யுருவா
           யிதுவே பயிராய்                 விளைவாகி
        இவர்போ யவரா யவர்போ யிவரா
           யிதுவே தொடர்பாய்              வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
           யுடனே யவமா                   யழியாதே
        ஒருகால் முருகா பரமா குமரா
           உயிர்கா வெனவோ               தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
            முடிமே லிணைதா              னருள்வோனே
        முநிவோ ரமரோர் முறையோ வெனவே
           முதுசூ ருரமேல்                 விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
           சிறுவா திருமால்                மருகோனே
        செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
           திருவீ ழியில்வாழ்               பெருமாளே.

Advertisement

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/262431529&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.