பகுதி - 236
இன்றைய பாடல் சிறுவை எனப்படும் தலத்துக்கானது. சின்னம்பேடு, சிறுவரம்பேடு என்றும் பெயருள்ள இந்தத் தலம் சென்னை-ஆரணி
இன்றைய பாடல் சிறுவை எனப்படும் தலத்துக்கானது. சின்னம்பேடு, சிறுவரம்பேடு என்றும் பெயருள்ள இந்தத் தலம் சென்னை-ஆரணி வழியில் பனப்பாக்கம், பொன்னேரிக்கு அருகிலுள்ளது. பாலமுருகன் என்ற பெயரில் முருகன் வீற்றிருக்கிறான். இந்த ஊரிலுள்ள திருமாலுக்குத் திருவூரகமால் என்று பெயர். அப்பெயர் இந்தப் பாடலில் குறிக்கப்படுகிறது. அம்பிகை, பல நாமங்களால் துதிக்கப்படுகிறாள். ‘வாழ்வரம் தருவாய், அடியேன் இடர் களைவாயே’ என்று வேண்டுவதால் இப்பாடல் இடர்களைத் தொலைக்க வல்லதாய் அறியப்படுவது.
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன
Advertisement
தான தந்தன தானன தானன தனதான
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி என்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி லேயுழல் சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பிவி னாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/262598798&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>