முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 247

மாற்றறியாத செம்பொன் மேனியை உடைய சிவபிரானிடத்திலிருந்து தன் உருவம் வேறுபடும்படியாகப் பிரிந்த உமையம்மையார்,

Updated On : 16 மே, 2016 at 4:37 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:49 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அறிவு இலாப் பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய்க்கத்தர் நன்றி அறியாத

Advertisement

அசடர்: மூடர்கள்; பேய்க்கத்தர்: பேய் அகத்தர், பேய்க்குணம் உள்ளவர்கள்;

அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி

அவலர்: பயனற்றோர்;

சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான்

கூட்டி: சேகரித்து; அவமே: வீணே;

திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே

பரிந்து: அன்புகொண்டு; என்று அருள்வாயே?: என்றுதான் தருவாய்?

இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள் தன்

மாற்றற்ற செம்பொன்: இன்ன மாற்று என்று மதிப்பிட்டு அறியமுடியாத செம்பொன்; இடபம்: நந்தி; கச்சி: காஞ்சி;

இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே

இருளை: மயக்கத்தை;

குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை

குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே.

குணம் அதாக்கி: தன் வசப்படுத்தி;

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர் ... அறிவற்ற பித்தர்களும்; உன்னுடைய திருவடியைத் தொழாதவர்களும் கெட்டவர்களுமான வஞ்சகர்களும்;

அசடர் பேய்க்கத்தர் நன்றி யறியாத அவலர் ...மூடர்களும்; பேய்க்குணத்தைக் கொண்டவர்களும்; நன்றியை உணராத பயனிலிகளும்—ஆன இத்தகையோரின்

மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து ... மீது நல்ல சொற்களைத் தொடுத்துக் கவிதைகள் கட்டி, அவர்களைப் புகழ்ந்து,

அவரைவாழ்த்தித் திரிந்து பொருள்தேடி ... இப்படிப்பட்டவர்களை வாழ்த்தி அலைந்து திரிந்து பாடுபட்டுப் பொருள்தேடி,

சிறிதுகூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து ... (அந்தப் பொருளை) ஓரளவு சேகரித்துக் கொண்டு, தெருக்களிலே உலவித் திரிந்து,

தெரிவைமார்க்குச் சொரிந்து ... (நெறியற்ற) பெண்களுக்கு (அப்படிச் சம்பாதித்த பொருளை) வாரியிறைத்து, (இந்த வகையிலே)

அவமேயான் திரியுமார்க்கத்து நிந்தை யதனை மாற்றி ... பொழுதை வீணாகக் கழித்துத் திரியும் என்னுடைய வழிகளால் எனக்கேற்படும் அவப்பெயரை நீக்கி;

பரிந்து தெளிய மோக்ஷத்தை யென்று அருள்வாயே ... என்மீது அன்புகொண்டு, நான் தெளிவைப் பெறுவதற்கான முக்திநிலையை எனக்கு எப்போது அருளப் போகிறாய்?

இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப்பி ரிந்து ... ‘இன்ன மாற்று’ என்று உணரமுடியாத சிவபிரானின் செம்பொன் வடிவத்திலிருந்து வேறுபடும்படிப் பிரிந்து,

இடபமேற் கச்சி வந்த உமையாள் தன் இருளைநீக்கத் தவஞ்செய்து... நந்தி வாகனத்தின் மீதமர்ந்து காஞ்சிபுரத்துக்கு வந்த உமையம்மைத் தன் மயக்கத்தைப் போக்கிக் கொள்வதற்காக இறைவனை நோக்கித் தவம் செய்ய,

அருளநோக்கிக் குழைந்த இறைவர் ... அந்தத் தவக்கோலத்தைக் கண்டு மனமுருகிய சிவபெருமானார்,

கேட்கத் தகுஞ்சொல் உடையோனே ... கேட்டு மகிழ்ந்ததான உபதேசத்தைச் சொன்னவனே!

குறவர்கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று. குறவர்களுடைய கூட்டத்துக்குள்ளே, ஒரு கிழவனுடைய வேடத்திலே புகுந்து;

குருவியோட்டித்திரிந்த தவமானை ... தினைப்புனத்திலே குருவிகளை ஓட்டியபடி திரிந்தவளும் தவம் நிறைந்தவளும் மான்போன்றவளுமான வள்ளியை,

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த ... உன்னுடைய வசமாக்கிக் கொண்டு உன்னுடைய தெய்வீகக் கோலத்தைக் காட்டி அவளை மணம்செய்து கொண்டவனே!

குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே. ... காஞ்சி குமரகோட்டத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

மாற்றறியாத செம்பொன் மேனியை உடைய சிவபிரானிடத்திலிருந்து தன் உருவம் வேறுபடும்படியாகப் பிரிந்த உமையம்மையார், தன் மயக்கம் தீரும்படியாக காஞ்சித் தலத்திக்கு நந்திவாகனத்தில் வந்து தவம் மேற்கொள்ள; அந்தத் தவக்கோலத்தில் தேவியைக் கண்ட இறையனார் மனம் நெகிழ்ந்தார்.  அப்படி நெகிழ்ந்த சிவபிரானுடைய உளளம் மகிழும்படியாக உபதேச மந்திரத்தை அவருக்குச் சொன்னவனே!  குறவர்களுடைய கூட்டத்துக்குள்ளே, கிழவடிவம் தரித்துக்கொண்டு புகுந்து, அங்கே தினைபுனத்தில் குருவிகளை ஓட்டியபடித் திரிந்திருந்த, தவம் நிறைந்த வள்ளிமானுக்கு உன்னுடைய தெய்வீகக் கோலத்தைக் காட்டி மணம்செய்து கொண்டவனே!  காஞ்சியின் குமரகோட்டத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

அறிவற்ற பித்தர்; உன்னுடைய திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர்; மூடர்; பேயின் தன்மையைக் கொண்டவர்கள்; நன்றி உணர்வே சிறிதுமற்றவர்கள்; துளியும் பயனற்றவர்கள்—ஆகிய இத்தகையோர்மேல் நல்ல சொற்களைத் தொடுத்து கவிமானை புனைந்து அவர்களை வாழ்த்தி அலைந்து திரிந்து, அதனால் ஏதோ ஓரளவுக்குப் பொருள் சம்பாதித்துக்கொண்டு; அப்படிச் சம்பாதித்த பணத்தை, தெருவிலே அலைந்து திரிந்தும் நெறியற்ற பெண்களுக்கு வாரியிறைத்தும் வீணே காலம் கழிப்பவனான என்னுடைய செய்கைகளால் எனக்கு நேரும் அவப்பெயரை நீக்கி; நான் தெளிவடையுமாறு மோட்ச கதியை என்றுதான் எனக்கு அருளப் போகிறாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.