முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 248

இன்றைய பாடல் திருவருணைத் தலத்துக்கானது.  முருகன் தன்னைத் தடுத்தாட்கொண்ட திருவண்ணாமலையை அருணகிரியார் மிகவும் போற்றிப் பரவியிருக்கிறார். 

Updated On : 21 மே, 2016 at 12:13 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:49 PM

இன்றைய பாடல் திருவருணைத் தலத்துக்கானது.  முருகன் தன்னைத் தடுத்தாட்கொண்ட திருவண்ணாமலையை அருணகிரியார் மிகவும் போற்றிப் பரவியிருக்கிறார்.  இந்தப் பாடல் அகப்பொருள் எனப்படும் நாயகி பாவத்தில் இயற்றப்பட்டது.  தன்னைப் பெண்ணாக பாவித்துக்கொண்டு பெரியாழ்வார்முதல் பல கவிஞர்கள் பெண்-பாவத்தில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.  அருணகிரியாரும் இந்த பாவத்தில் பாடியிருக்கிறார்.  அப்படிப்பட்ட பலவற்றின் இதுவும் ஒன்று. 

பாடலின் அமைப்பைப் பற்றிச் சொல்வதானால், எப்போதும்போல ஒவ்வோரடிக்கும்—ஒற்றொழித்து—இருபத்தெட்டு எழுத்துகள்.  இவற்றில் ஒவ்வொரு 6, 15, 23வது எழுத்தும் தவறாமல் நெடிலாக வரும்.

இதைத்தவிர இன்றைய பாடலில் இன்னொரு சிறப்பும் உண்டு.  ஆங்கிலத்தில் internal rhyming என்று சொல்வார்கள்.  ஒவ்வொரு அடியிலும் எதுகை மடக்கி மடக்கிப் பயிலும்.  உதாரணமாகச் சொல்வதானால், ஷெல்லியின் The Cloud என்ற கவிதையில்:

Advertisement

I am the daughter of Earth and Water,
And the nursling of the Sky;
I pass through the pores of the ocean and shores;
I change, but I cannot die.

என்று மடங்கி மடங்கி வருவதை சிறப்பித்துச் சொல்வார்கள்.  நம் நெடிய மரபில் இது நெடுகிலும் பயின்று வந்திருக்கிறது.  இன்றைய பாடலைக் கவனியுங்கள்.  ஒவ்வோரடியிலும் ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் எதுகை—சரியாகச் சொல்வதானால் ஒத்த ஓசை—மடங்கி மடங்கிப் பயில்வதைப் பார்க்கலாம். இடருக்//கொடுமைக், இயலை//முயலை, தொடரக்//அடையக்… இப்படி ஒத்த ஒலியமைப்பு தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம்.  பாடலைப் பார்ப்போம்.

தனனத் தனனாதன தனனத் தனனாதன
தனனத் தனனாதன                   தனதான

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு

         மிறுதிச் சிறுகால்வரு              மதனாலே

      இயலைத் தருகானக முயலைத் தருமேனியி

         லெரியைத் தருமாமதி             நிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை

         தொலையத் தனிவீசிய             கடலாலே

      துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்

         துவளத் தகுமோ துயர்             தொலையாதோ

வடபொற் குலமேருவின் முடுகின் பொருசூரனை

         மடியச் சுடஏவிய                  வடிவேலா

      மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்

         மகிழப் புனமேவிய                மயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய

         லருணைத் திருவீதியி             லுறைவோனே

      அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி

         அமரர்க் கரசாகிய                  பெருமாளே

</p><p align="justify"> </p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/265173870&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.