முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 249

அடர்த்தியாகப் படர்ந்துள்ள தாழை மடலுடைய தழைகள் நெருங்கியுள்ள வயல்கள் நிறைந்த திருவண்ணாமலைத் தலத்தின் திருவீதியில் வீற்றிருப்பவனே!

Updated On : 21 மே, 2016 at 12:13 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:49 PM

பதச் சேதம்

சொற் பொருள்

இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே

Advertisement

இடருக்கு இடர் ஆகிய: துன்பத்துக்குமேல் துன்பமாக வரும்;  கால்: காற்று; சிறுகால்: தென்றல்;

இயலை தரு கானகம் முயலை தரு மேனியில் எரியை தரு மா மதி நிலவாலே

இயலைத்தரு: தகுதியைக் கொண்ட; முயலைத்தரு: முயல்கறையைக் கொண்ட;

தொடர கொடு வாதையில் அடையக் கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே

வாதை: வேதனை; அடையக் கரைமேல்: கரை முழுவதும்; தனி: ஒப்பற்ற;

துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ

பூமலர் அணை: பூக்கள் தூவப்பட்ட படுக்கை;

வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடிவேலா

முடுகி: விரைந்து; பொருசூரனை: போரிட்ட சூரனை; வடிவேல்: கூர்மையான வேல்;

மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா

புனம்: தினைப்புனம்; குறமெய்த் திருமாமகள்: குறவர் குலத்தைச் சேர்ந்தவளும், திருமகளின் மகளுமான வள்ளி;

அடர படர் கேதக மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே

அடர: அடர்ந்து, நெருக்கமாக; கேதக மடலின்: தாழை மடலின்;

அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே.

அவனி: அவனிக்கும், உலகுக்கும்; திருமாதொடு: திருமாதுக்கும்—உமைக்கும்; இமையாவிழி அமரர்க்கு: தேவர்களுக்கும்;

இடருக்கு இடர் ஆகிய கொடுமைக் கணை மேல் வரும் இறுதிச் சிறு கால் வரும் அதனாலே ... (ஏற்கெனவே இருக்கும் பலவிதமான) துன்பங்களுக்குமேலே துன்பமாக வந்து பாய்கின்ற மன்மதனுடைய பாணங்களாலும்; இறுதியைத் தருவதைப்போல (மரணத்தை உண்டுபண்ணுவதைப் போன்று) வீசுவதான தென்றற் காற்றாலும்;

இயலைத் தரு கானகம் முயலைத் தரு மேனியில் எரியைத் தரு மா மதி நிலவாலே ... முயல்கறை என்ற களங்கத்தை மேனியில் இயல்பாகக் கொண்ட பெரிய சந்திரனுடைய நிலவொளி நெருப்பைக் கக்குவதாலும்;

தொடரக் கொடு வாதையில் அடையக் கரை மேல் அலை தொலையத் தனி வீசிய கடலாலே ... நான் தொடர்ந்து வேதனையை அடையும்படி கரையின்மேலே முழுவதுமாக, (கரையின் மேலே பட்டு) அழியும்படி அலைகளை வீசுகின்ற ஒப்பற்ற கடலாலும்;

துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவளத் தகுமோ துயர் தொலையாதோ ... துணைக்கு ஒருவருமில்லாமல்—தனியாக—மலர்ப்படுக்கையில் கிடக்கின்ற என்னுடைய உயிர் துவண்டு போகிறதே, இது தகுமோ?  இந்தத் துயரம் தீராதோ?

வட பொற் குல மேருவின் முடுகின் பொரு சூரனை மடியச் சுட ஏவிய வடிவேலா... வடக்கேயுள்ள பொன்மலையான மேருவைப்(போன்ற வடிவத்துடன்) விரைந்து வந்து போரிடுகின்ற சூரபத்மன் இறக்கும்படியும்; சுட்டு எரிக்கும்படியும் கூரிய வேலை வீசியவனே!

மறவக் குலமாம் ஒரு குற மெய்த் திரு மா மகள் மகிழப் புன மேவிய மயில் வீரா... வேடர் குலத்தைச் சேர்ந்தவளும்; குறத்தியும்; மெய்மையான லக்ஷ்மியின் மகளுமான* வள்ளி மகிழும்படி தின்புனத்தை அடைந்து நின்ற மயில் வீரனே!

(வள்ளி தேவானை இருவருமே திருமாலின் கண்ணிலிருந்து உதித்தவர்கள் என்பதால் இலக்குமியின் மகளும் ஆகிறார்கள்.)

அடரப் படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணைத் திரு வீதியில் உறைவோனே ... அடர்த்தியாகப் படர்ந்துள்ள தாழை மடலுடைய தழைகள் நெருங்கியுள்ள வயல்கள் நிறைந்த திருவண்ணாமலைத் தலத்தின் திருவீதியில் வீற்றிருப்பவனே!

அவனித் திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே. ... இந்த உலகத்துக்கும்; உமையம்மைக்கும்; சிவனாருக்கும்; இமைக்காத விழிகளைக் கொண்ட தேவர்களுக்கும் அரசனாக விளங்கும் பெருமாளே!

சுருக்க உரை

வடக்கேயுள்ள பொன்மயமான மேருமலையைப் போன்ற தோற்றத்துடன் போருக்கு விரைந்துவந்து சண்டையிட்ட சூரன் இறந்துபோகும்படி, சுட்டெரிக்கும் கூர்மையான வேலை அவன்மீது வீசியவனே!  வேடர் குலத்தவளும்; குறத்தியும்; மெய்மை திகழும் இலக்குமி தேவியின் மகளுமான வள்ளி மனம் மகிழும்படி அவள் இருந்த தினைப்புனத்துக்கே விரும்பிச் சென்ற மயில்வீரனே!  அடர்த்தியாய்ப் படர்ந்துள்ள தாழை மடல்களின் தலைகள் நெருக்கமாகப் பரவியுள்ள வயல்கள் நிறைந்த திருவண்ணாமலைத் தலத்தின் திருவீதியில் வீற்றிருப்பவனே!

துன்பத்துக்குமேல் துன்பம் தருவதைப்போல என்மீது பாயும் மன்மதன் கணைகளாலும்; அவற்றோடு சேர்ந்து வந்து உயிரைப் போக்குவதுபோல வீசும் தென்றல் காற்றாலும்; காட்டு முயலைப் போன்ற கறையைத் தன் இயல்பாகக் கொண்டதாகிய சந்திரன் நெருப்பைப்போலப் பொழியும் நிலவொளியாலும்; நான் கொடிய வேதனையை அடையும்படி மேலும் மேலும் தொடர்ந்து கரையை நிறைத்தபடி வந்து வீசும் அலைகளை உடைய ஒப்பற்ற கடலாலும்; துணைக்கென்று யாருமில்லாமல் தனியளாக இந்த மலர்ப்படுக்கையிலே கிடக்கின்ற எளிய பெண்ணான என்னுடைய உயிர் வாடுவது தகுமோ?  என்னுடைய துக்கம் தீராதோ?  (உயிர்வாட்டம் நீங்கும்படியும், துக்கம் தொலையும்படியும் வந்து என்னை ஆண்டுகொள்ள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.