முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 250

திருவாவினன்குடித் திருத்தலத்துக்கான பாடலிது.  ‘உன்னுடைய திருப்பாதங்களான அமுதத்தைப் பருகும்படியான ஞானத்தைத்

Updated On : 21 மே, 2016 at 12:34 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:50 PM

திருவாவினன்குடித் திருத்தலத்துக்கான பாடலிது.  ‘உன்னுடைய திருப்பாதங்களான அமுதத்தைப் பருகும்படியான ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று இறைவனைக் கோருகிறது.  முற்றிலும் குற்றெழுத்துகளால் அமைந்துள்ள இந்தப் பாடலில் 8, 17, 26 ஆகிய எழுத்துகளும் கடைசிச் சீரில் இரண்டாம் மூன்றாம் எழுத்துகள் மட்டுமே (ஒற்றொழித்து) நெடிலாக அமைந்திருப்பதைக் காணலாம்.

தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான                         தனதான

முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு

Advertisement

   முதிர்விலிள தனபார                    மடவார்தோள்

முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்

   மொழியுமது மதியாமல்                  தலைகீழ்வீழ்ந்

தகமகிழ விதமான நகையமுத மெனவூற

   லசடரக மெழவாகி                      மிகவேயுண்

டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி

   னமுதுபரு கிடஞான                     மருளாயோ

மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி

   மறுகுபுனல் கெடவேலை                 விடுவோனே

வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி

   வருபனிரு கரதீர                        முருகோனே

பகர்வரிய ரெனலாகு முகைகொழுந ருளமேவு

   பரமகுரு வெனநாடு                      மிளையோனே

பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு

   பழநிமலை தனில்மேவு                  பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/265178634&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.