முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 251

பெரிய சுறாமீன்களை வீசி எறிகின்ற அலைகள் மோதும் ஒளிபொருந்தி கடலிலுள்ள பரந்த நீர் கலங்கும்படியாக வேலை வீசியவனே!

Updated On : 24 மே, 2016 at 5:40 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:50 PM

பதச் சேதம்

சொற் பொருள்

முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள்

Advertisement

முகை: மொட்டு; முளரி: தாமரை; ப்ரபை வீசும்: ஒளி வீசும்; முதிர்வில்: முதிராத;

முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலை கீழ் வீழ்ந்து

அநுபோக: அனுபவிக்கும்; விழலன்: பயனற்றவன் (விழல்: பயனற்ற—‘விழலுக்கு நீர்ப்பாய்ச்சி ஓயமாட்டோம்’ பாரதி); தலைகீழ் வீழ்ந்து: (ஆணவத்தால்) தலைகுப்புற விழுந்து;

அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு

நகை: புன்னகை; ஊறல்: இதழ் ஊறல், எச்சில்;

அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ

தமியேன்: தனியேன், துணையற்றவன்;

மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே

மகரம்: சுறா முதலான பெரிய மீன்கள்; திரை: அலை; பகர கடல்: ஒளிபொருந்திய கடல்; தடவாரி: விசாலமான நீர்ப்பரப்பு; மறுகு புனல்: கலங்கும் நீர்;

வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு ப(ன்)னிரு கர தீர முருகோனே

அவுண்: அவுணர், அரக்கர்; மகசேனை: மகா சேனை; உகம்: யுகம், கால எல்லை, வாழ்நாள்;

பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே

பகர் அரியர்: சொல்வதற்கு அரிதானவர்;

பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலை தனில் மேவும் பெருமாளே.

பணிலம்: சங்கு; வெயில் வீசும்: ஒளி வீசும்;

முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் ... தாமரை மொட்டுகளைப் போன்றதும்; ஒளி வீசுவதும்; அழகிய பொன்மலை போன்றதும்,

முதிர்வு இல் இள தன பார மடவார் தோள்முழுகி அமிழ் அநுபோக விழலன் என ... முதிராத்தும்; இளமையானதுமான தனபாரங்களை உடைய மகளிருடைய தோள்களிலே மூழ்கி அமிழ்ந்து நுகர்பவனாகிய வீணன் என்று—

உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலை கீழ் வீழ்ந்து ... உலகத்தவர்கள் சொல்கின்ற வசைமொழிகளைச் சற்றும் பொருட்படுத்தாமுல் ஆணவத்தால் தலைகுப்புற விழுந்து;

அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு அழியும் ஒரு தமியேனும் ... உள்ளம் மகிழும்விதமாகப் புன்னகையும்; (இப்படிப்பட்ட) மூடர்களுடைய வீட்டைத் தேடிச் சென்று; இதழில் ஊறும் எச்சிலே அமுதம் என்று பருகி வீணில் அழிகின்ற துணையற்றவனான அடியேன்,

மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ ... போற்றிப் பாராட்டப்படுபவையான உன்னுடை இரண்டு திருவடிகளுடைய அமுதத்தையும் பருகுகின்ற ஞானத்தைத் தந்தருள வேண்டும்.  (இதழ் ஊறலை அமுதாகக் கருதாமல், உனது திருப்பாதங்களின் அனுபூதியாகிய அமுதைப் பருகும் ஞானத்தை தரவேண்டும்.)

மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே ... பெரிய சுறாமீன்களை வீசி எறிகின்ற அலைகள் மோதும் ஒளிபொருந்தி கடலிலுள்ள பரந்த நீர் கலங்கும்படியாக வேலை வீசியவனே!

வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு ப(ன்)னிரு கர தீர முருகோனே ... வரிசை வரிசையாக வத்ந அசுரர்களுடைய பெரிய சைனியங்களின் காலம் முடிந்துபோகும்படி மயில்மீது ஏறி வருகின்ற பன்னிரண்டு கரத்தனே, தீரனே, முருகனே!

பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே ... சொற்களால் எடுத்துச் சொல்ல முடியாதவர் எனும்படியான உமாதேவியாரின் கணரான சிவனார், ‘என் உள்ளத்திலே வீற்றிருக்கும் பரம குருவே’ என்று உன்னை விரும்பி அழைக்கும் இளையவனே!

பணில(ம்) மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலை தனில் மேவு(ம்) பெருமாளே. ... சங்கு மணிகள் ஒளிவீசுகின்ற அழகான மலையின் உச்சி, சந்திரனைச் சூடிக்கொண்டிருப்பது போல உயரமானதாகிய பழனிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

பெரிய மகரமீன்களை வீசி எறியும் அலைகள் மோதுவதான ஒளிபொருந்திய கடலிலுள்ள அகன்ற நீர்ப்பரப்பு கலங்கும்படியாக வேலை வீசியவனே!  வரிசை வரிசையாக வந்த அசுரர்களுடைய பெரிய சேனைகளின் வாழ்நாள் முடியும்படி மயிலேறி வந்த பன்னிரு கரத்தனே!  தீரனே! முருகனே!  விவரிக்க முடியாதவர் என்னும்படியான உமாதேவியாரின் கணவரான சிவனார் ‘என் உள்ளத்தில் குடிகொண்டுள்ள பரமகுருவே’ என்று மகிழ்ந்து அழைக்கும் இளையவனே!  சங்குகளும் மணிகளும் ஒளிவீசுவதும்; உச்சியில் சந்தினைச் சூடியதுபோல உயர்ந்த்துமான பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

தாமரை மொட்டுகளைப் போன்றவையும்; ஒளிவீசும் பொன்மலை போன்றவையும்; முதிராதவையும்; இளமை நிறைந்தவையுமான தனபாரங்களை உடைய பெண்களுடைய தோள்களிலே தோய்ந்து மூழ்குவதான அனுபவத்தில் திளைத்து அழியும் வீணன் என்று உலகோர் சொல்லும பழியையும் பொருட்படுத்தாமல், ஆணவத்தால் தலைகுப்புறக் கவிழ்ந்து; மனத்துக்கு இன்பமான புன்னகையையும்; அமுதம் என மயங்கச் செய்யும் இதழூறலையும் தரும் மூட மாதர்களுடை வீடுகளைத் தேடிச் சென்று அழிகின்றவனும், துணையற்றவனுமான அடியேன், போற்றப்பட வேண்டியவையான உன்னுடைய திருப்பாதங்களில் ஊறும் அமுதைப் பருகும்படியான ஞானத்தை அருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.