பகுதி - 256
எந்தக் குறிப்பிட்ட தலத்துமென்று இல்லாமல் உள்ள பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த பாடல் இது. எல்லாச் சீர்களிலும்
எந்தக் குறிப்பிட்ட தலத்துமென்று இல்லாமல் உள்ள பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த பாடல் இது. எல்லாச் சீர்களிலும் (கடைசிச் சீர் நீங்கலாக) இரண்டாவது எழுத்து வல்லின மெய்யாக அமைந்துள்ள இந்தச் சந்தத்தில் பத்துப் பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களும் ‘முத்தா முத்தீ யத்தா சுத்தா’ என்று ஒரே ஈற்றடியோடு முடியும். இப்படி ஓரே ஈற்றடியோடு ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் முடிந்தால், அந்த ஈற்றடியை ‘மகுடம்’ என்பார்கள். இந்தப் பாடல்களில் உற்பாதப்பூ, எற்றா வற்றா ஆகிய இரண்டு பாடல்களை இதற்குமுன்னர் 19, 148 ஆகிய தவணைகளில் பார்த்திருக்கிறோம். ‘செட்டாக’ என்ற சொல்லை இன்று ஏறத்தாழ மறந்துவிட்டோம். செட்டு என்று சொல்லும்போதெல்லாம் set என்ற ஆங்கிலச் சொல்தான் நம் நினைவுக்கு வருகிறது. ‘கட்டுசெட்டாக’ வாழ்பவர்கள் பற்றிய வழக்கிலும் இன்னும் ஓரிரு இடங்களிலும் இந்தச் சொல் அவ்வப்போது தலைகாட்டுகிறது. சொற்பொருளை நாளைக்குப் பார்ப்போம்.
முருகனுடைய திருவடியை ஓதும் பாக்கியத்தைக் கேட்கிறது இந்தப் பாடல்.
தத்தா னத்தா தத்தா னத்தா
தத்தா னத்தத் தனதான
Advertisement
செட்டா கத்தே னைப்போ லச்சீ
ரைத்தே டித்திட் பமதாகத்
திக்கா மற்பொ டுற்றா ரிற்சீ
ருற்றா ருக்குச் சிலபாடல்
பெட்டா கக்கூ றிப்போ தத்தா
ரைப்போல் வப்புற் றுழலாதே
பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்
சற்றோ தப்பெற் றிடுவேனோ
எட்டா நெட்டா கத்தோ கைக்கே
புக்கோ லத்திட் டிமையோர்வா
னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா
னெட்டா வெட்டிப் பொரும்வேலா
முட்டா மற்றா ளைச்சே விப்பார்
முற்பா வத்தைக் களைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/265815883&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>