பகுதி - 420
திருவடியை வணங்கும் பேற்றைக் கேட்கும் இப்பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது.
திருவடியை வணங்கும் பேற்றைக் கேட்கும் இப்பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகள்; தொங்கல் சீரில் மட்டுமே நெடில்; மற்ற அனைத்து எழுத்துகளும் குறில்; 2, 3, 5, 6, 8, 9 ஆகிய சீர்களில் இரண்டாமெழுத்து மெல்லொற்று. இப்பாடலில் வல்லொற்று இடம்பெறவில்லை.
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
தனதனன தந்த தந்த - தனதான
Advertisement
அனைவரும ருண்ட ருண்டு கடிதெனவெ குண்டி யம்ப
அமரஅடி பின்தொ டர்ந்து - பிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுடனெ லும்ப லம்பு
மவலவுட லஞ்சு மந்து - தடுமாறி
மனைதொறுமி தம்ப கர்ந்து வரவரவி ருந்த ருந்தி
மனவழிதி ரிந்து மங்கு - வசைதீர
மறைசதுர்வி தந்தெ ரிந்து வகைசிறுச தங்கை கொஞ்சு
மலரடிவ ணங்க என்று - பெறுவேனோ
தினைமிசைசு கங்க டிந்த புனமயிலி ளங்கு ரும்பை
திகழிருத னம்பு ணர்ந்த - திருமார்பா
ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரிவலம் வந்த செம்பொன் - மயில்வீரா
இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக கந்த என்று - மிளையோனே
எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
மிமையவரை யஞ்ச லென்ற - பெருமாளே.