முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 522

அனுபவ ஞானம் எனப்படும்

Updated On : 2 ஏப்ரல், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:41 PM

அனுபவ ஞானம் எனப்படும் அனுபூதி நிலையை அருளும்படி இறைவனை வேண்டும் இந்தப் பாடல் திருச்சிக்கு அருகேயுள்ளதும் சோழநாட்டின் தலைநகரான ‘வஞ்சி’ என்றறறியப்படுவதுமான கருவூருக்கு உரிய பாடல்.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய இந்தப் பாடலில் தொங்கல் சீரை ஒழித்து மற்ற எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று எழுத்துகள் அமைந்துள்ளன.  இருந்தாலும் இதற்குள்ளும் ஒரு வேறுபாடு அமைந்திருக்கிறது.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் இரண்டு குறிலும் மூன்றாவது எழுத்தாக ஒரு நெடிலையும் கொண்டவை; இரண்டு, நான்கு ஆறு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும்; இவற்றைத் தொடர்ந்து (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்றையும் கொண்டவை.

தனனா தனனத் தனனா தனனத்
தனனா தனனத்                     தனதான

தசையா கியகற் றையினால் முடியத்
    தலைகா லளவொப்           பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
    றவிரா வுடலத்                தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
   படுபூ ரணநிட்                 களமான
பதியா வனையுற் றநுபூ தியிலப்
   படியே யடைவித்              தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
   கருணோ தயமுத்             தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
   றவர்வாழ் வயலித்            திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
   கமலா லயன்மைத்            துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
    கருவூ ரழகப்                  பெருமாளே.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.