முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 534

இந்தப் பாடல் வள்ளி மலைக்கானது

Updated On : 16 ஏப்ரல், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:48 PM

உனது திருவடியை உணர அருளவேண்டும் என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் வள்ளி மலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒற்றொழித்து நான்கெழுத்துகளைக் கொண்டவை.  இவற்றின் மூன்றாம் எழுத்து நெடில்; நெடிலை அடுத்து கணக்கில் சேராத வல்லொற்று பயில்கிறது.  இரண்டு, நான்கு ஆறு ஆகிய சீர்கள் ஒற்றொழித்து இரண்டு குற்றெழுத்துகளைக் கொண்டவை; இரண்டுக்கும் இடையே பெரும்பாலும் இடையின ஒற்றும் மெல்லின ஒற்றும் கலந்து பயில்கின்றன.

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
      தனதாத்த தய்ய                     தனதான

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
         குயில்போற்ப்ர சன்ன             மொழியார்கள்
      குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
         குருவார்த்தை தன்னை           யுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
         இடர்கூட்ட இன்னல்              கொடுபோகி
      இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
         னிருதாட்கள் தம்மை             யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
         மயில்மேற்றி கழ்ந்த              குமரேசா
      வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
         மலைகாத்த நல்ல               மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
         யருள்போற்றும் வண்மை         தரும்வாழ்வே
      அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
         அடியார்க்கு நல்ல                பெருமாளே.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.