முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 442

இந்தப் பாடலும் திருச்செந்தூர்த் தலத்துக்கானதுதான்.

Updated On : 2 ஜனவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:09 PM

'உன் மலர்ப்பாதங்களை அளித்தருள வேண்டும்’ என்ற இறைவனைக் கேட்கும் இந்தப் பாடலும் திருச்செந்தூர்த் தலத்துக்கானதுதான்.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளை உடைய பாடல்.  ஒன்று மூன்று ஐந்து ஆகிய சீர்களில் மூன்றாம் எழுத்து நெடில்; ஐந்தாம் எழுத்து வல்லொற்று;  நெடிலுடன் கூடிய சீரை மூன்று குறிலெழுத்துகளை உடைய சீர் மாறி மாறித் தொடர்வதால் ஓசையின்பம் சிறக்கிறது.

தனனாத் தனன தனனாத் தனன
      தனனாத் தனன                     தனதான

Advertisement

நிலையாப் பொருளை யுடலாக் கருதி
         நெடுநாட் பொழுது               மவமேபோய்
      நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
         நிறைவாய்ப் பொறிகள்           தடுமாறி      
மலம்நீர்ச் சயன மிசையாப் பெருகி
         மடிவேற் குரிய                   நெறியாக
      மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
         மலர்தாட் கமல                  மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
         குளமாய்ச் சுவற                 முதுசூதம்
      குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
         கொதி வேற் படையை           விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
         அழியாப் புநித                    வடிவாகும்
      அரனார்க் கதித பொருள்காட் டதிப
         அடியார்க் கெளிய                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.