முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 446

இது பொதுப்பாடல்களை வரிசையைச் சேர்ந்தது.

Updated On : 6 ஜனவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:10 PM

‘ஞானம் உற்று உனது தாளை ஓதி நித்தலும் வாழுமாறு’ அருளவேண்டிக் கேட்கின்ற இது பொதுப்பாடல்களை வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகள்; ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களின் கடைசி எழுத்தும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் முதலெழுத்தும் நெடில்; ஒன்று, மூன்று ஐந்து ஆகிய சீர்களின் இரண்டாம் எழுத்து வல்லொற்று.

தத்ததனா தான தத்ததனா தான
      தத்ததனா தான                     தனதான

மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு
         மக்களுமா றாத                  துயர்கூர
      மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ
         வைத்தவர்தா மேக               மதிமாய
நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு
         நெட்டிளவாம் வாதை             யணுகாமுன்
      நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி
         நித்தலும்வாழ் மாறு              தருவாயே
நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத
         னற்றவர்தா நாட                 விடையேறி
      நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு
         நற்றுணைவா ஞால              மிகவாழப்
பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக
         பத்தியதா மாறு                  முகநாளும்
      பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத
         பத்திசெய்வா னாடர்              பெருமாளே.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.