முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 462

இப்பாடல் வடகூர் என்ற தலத்துக்கானது.

Updated On : 26 ஜனவரி, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM

இப்பாடல் வடகூர் என்ற தலத்துக்கானது.  இத்தலம் புதுச்சேரிக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிருக்கிறது என்பது உரையாசிரியர் குகஸ்ரீ தணிகைமணியவர்களுடைய குறிப்பால் தெரிகிறது.  முருகனுடைய திருவடிகளைத் தொழும் பேறு ஒன்றையே வரமாகக் கேட்கும் பாடல் இது.

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் எல்லா எழுத்துகளும் குறில்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒவ்வொரு மூன்றாவது எழுத்தும் நெடில்.

தனதன தனனா தனதன தனனா
      தனதன தனனா                     தனதான

Advertisement

அரியய னறியா தவரெரி புரமூ
         ணதுபுக நகையே                 வியநாதர்
      அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
         றழலையு மழுநேர்               பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
         கமும்விழ விழியே               வியநாதர்
       மனமகிழ் குமரா எனவுள திருதாள்
         மலரடி தொழுமா                றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
         அவனியை வலமாய்             வருவோனே
      அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
         அயில்தனை விசையாய்          விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
         மருவியொர் குறமா              தணைவேடா
      மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
         வருதவ முநிவோர்               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.