முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 598

‘மனநாசத்தைக்’ கோரும் இந்தப் பாடல்

Updated On : 4 ஜூலை, 2017 at 11:05 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:51 PM


ரமணர் சொல்வதைப் போன்ற ‘மனநாசத்தைக்’ கோரும் இந்தப் பாடல் கருவூருக்கு அருகே இருக்கும் திருவெஞ்சமாக்கூடல் என்ற தலத்துக்குரியது.  இப்பாடலில் ‘வேற்கானத்து உறைவோனே’ என்று வரும் இடத்தில் திருவேற்காடு குறிக்கப்படுகிறது.  இங்கே உள்ள முருகன் ஆலயம் வேறு தற்போது திருவேற்காடு என்றாலே நினைக்கு வரும் ஆலயம் வேறு என்பதை இதற்கு முன்னாலும் குறித்திருக்கிறோம்.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகள் என்ற மிகச் சிறிய தாள அமைப்பைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளும், ஒரு நெட்டெழுத்தும் இடையில் பயிலும் (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் அமைந்தவை.  இரண்டு நான்கு ஆகிய சீர்கள் ஒரு நெடிலும், ஒரு குறிலும், ஒரு வல்லொற்றுமாய் அமைந்தவை.

தந்தனாத் தானத் தனதான

வண்டுபோற் சாரத்  தருள்தேடி

      மந்திபோற் காலப்  பிணிசாடிச்

Advertisement

செண்டுபோற் பாசத்    துடனாடிச்

      சிந்தைமாய்த் தேசித்  தருள்வாயே

தொண்டராற் காணப்   பெறுவோனே

      துங்கவேற் கானத்   துறைவோனே

மிண்டராற் காணக்  கிடையோனே

      வெஞ்சமாக் கூடற்  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.