முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 600

நற்கதியைக் கோரும் இப்பாடல்

Updated On : 5 ஜூலை, 2017 at 12:26 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:51 PM


நற்கதியைக் கோரும் இப்பாடல், ஈரோட்டுக்கு அருகிலுள்ள திருக்கொடுமுடி என்ற தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளையும் எளிய சந்த அமைப்பையும் கொண்ட பாடல்.  இருப்பதே (ஒரேபோன்ற) இரண்டு சீர்கள்தான் என்பதால் அமைப்புக் கணக்கைத் தவிர்க்கின்றோம்.

தனதனத் தனனத்    தனதான

Advertisement

இருவினைப் பிறவிக்  கடல்மூழ்கி

                இடர்கள்பட் டலையப்    புகுதாதே

திருவருட் கருணைப்   ப்ரபையாலே

                திரமெனக் கதியைப்  பெறுவேனோ

அரியயற் கறிதற்    கரியோனே

                அடியவர்க் கெளியற்   புதநேயா

குருவெனச் சிவனுக்    கருள்போதா

                கொடுமுடிக் குமரப்   பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.