பகுதி - 520
திருச்செங்கோடு தலத்துக்கானது.
உன்னுடைய திருவடிகளில் வைத்திருக்கும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்படி அருளவேண்டும் என்று கோருகிற இப்பாடல் திருச்செங்கோடு தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒற்றொழித்து நான்கு குற்றெழுத்துகளைக் கொண்டவை; கணக்கில் சேராத இரண்டாம் எழுத்து வல்லொற்று; முதற் சீரும் மூன்றாம் சீரும் எதுகையாக அமைந்துள்ளன. இப்படி அமைவதை வழியெதுகை என்று சொல்வோம். இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் இரண்டெழுத்துகளைக் கொண்டவை.
தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான தனதான
புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவு மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாத பெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்ப மெனமாய
நிட்டையுடன் வாழு மடியேன்நான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோத நினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணி மருகோனே
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி மறையோனே
Advertisement
கற்பவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர் கொடிகோவே
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர் பெருமாளே.