முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 552

இந்தப் பாடல் திருத்தணிக்கானது

Updated On : 9 மே, 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:58 PM

‘வலியதும் துணையிருப்பதுமான திருப்புகழ் அடியார்களைப் போற்றாமல் திரியலாமா’ என்று கேட்கும் இந்தப் பாடல் திருத்தணிக்கானது.

எல்லாச் சீர்களும் ஒத்த அமைப்பை உடைய இந்தப் பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள் உள்ளன.  எல்லாச் சீர்களும் ஒற்றொழித்து நான்கு நான்கு எழுத்துகளையும் கணக்கில் சேராத மூன்றாவது எழுத்தாக ஒரு வல்லொற்றையும் கொண்டவை.

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
                தனத்தன தனத்தன                                                தனதான

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
                      இடுக்கினை யறுத்திடு                                 மெனவோதும்
                இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
                        னிலக்கண இலக்கிய                                     கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
                        தலத்தினில் நவிற்றுத                                 லறியாதே
                தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
                        சமர்த்திகள் மயக்கினில்                             விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
                        களிப்புட னொளித்தெய்த                           மதவேளைக்
                கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
                        கனற்கணி லெரித்தவர்                               கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
                        புறத்தினை யளித்தவர்                                தருசேயே
                புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
                        பொருப்பினில் விருப்புறு                           பெருமாளே.

 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.