பகுதி - 668
மாதர் மீதுள்ள மயக்கத்தை
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:24 PM
மாதர் மீதுள்ள மயக்கத்தை அறுக்கக் கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். முதற் சீரில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; இரண்டாவது சீரில் குறில்-நெடில்-குறில் என மூன்றெழுத்துகளும்; மூன்றாம் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு வல்லின ஒற்றும் அமைந்துள்ளன.
தான தனான தத்த தனதானா
Advertisement
கீத விநோத மெச்சு குரலாலே
கீறு மையார் முடித்த குழலாலே
நீதி யிலாத ழித்து முழலாதே
நீமயி லேறி யுற்று வரவேணும்
சூதமர் சூர ருட்கப் பொருசூரா
சோண கிரியி லுற்ற குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.