முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 672

பசியாலும் நோயாலும் வாடுவதான

Updated On : 24 அக்டோபர், 2017 at 10:19 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:27 PM

பசியாலும் நோயாலும் வாடுவதான இந்த உடலோடு பிணிக்கப்பட்டிருக்கின்ற பிறவிப் பிணியை அறுத்தருள வேண்டும் என்று கோருகின்ற இப்பாடல் திருத்தணிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  எல்லாச் சீர்களும் ஒரேமாதிரியான அமைப்பைக் கொண்டவை.  எல்லாச் சீர்களிலும் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு வல்லொற்றுகளும் அமைந்துள்ளன.  மெல்லொற்று எதுவும் கலக்காத பாடல்.


தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்

      தனத்தனத் தனத்தனத்               தனதான

Advertisement

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
         பரித்தவப் பதத்தினைப்           பரிவோடே

படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
         பசிக்குடற் கடத்தினைப்           பயமேவும்

பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
         பிணித்தமுக் குறத்தொடைப்      புலனாலும்

பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
         குறிக்கருத் தெனக்களித்          தருள்வாயே

கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
         கழித்தமெய்ப் பதத்தில்வைத்      திடுவீரா

கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
         கதித்தநற் றிருப்புயத்             தணைவோனே

செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைக்
         சிரித்தெரித் தநித்தப்பொற்         குமரேசா

சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
         சிறப்புடைத் திருத்தணிப்          பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.