முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 674

‘இது வேண்டும், அது வேண்டும்’ என்றெல்லாம் கோரியபடி

Updated On : 26 அக்டோபர், 2017 at 9:17 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:27 PM

ஆண்டருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் கதிர்காமத்துக்கானது.  ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்றெல்லாம் கோரியபடித் தொடங்கினாலும் ‘இப்படிப்பட்ட சௌகரியங்கள் எல்லாமும் கிடைக்கப்பெற்று, சம்சாரியாகித் திண்டாடும் அவதி வேண்டாம்’ என்று உணர்த்தி நடக்கிறது இப்பாடல்.  இதில் சரிபாதி—அதாவது பின்பாதி—இரண்டடிகள் முழுக்கவே ராமாயணம்.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) இரண்டு வல்லொற்றுகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் மூன்றாவது எழுத்து நெடிலாக வரும் நான்கெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்தத் தனதான தானன
      தனத்தத் தனதான தானன
      தனத்தத் தனதான தானன           தனதான

Advertisement

உடுக்கத் துகில்வேணு நீள்பசி
         யவிக்கக் கனபானம் வேணுநல்
         ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
         இருக்கச் சிறுநாரி வேணுமொர்
         படுக்கத் தனிவீடு வேணுமிவ்     வகையாவுங்

கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
         மயக்கக் கடலாடி நீடிய
         கிளைக்குப் பரிபால னாயுயி      ரவமேபோம்

க்ருபைச்சித் தமுஞான போதமு
         மழைத்துத் தரவேணு மூழ்பவ
         கிரிக்குட் சுழல்வேனை யாளுவ   தொருநாளே

குடக்குச் சிலதூதர் தேடுக
         வடக்குச் சில தூதர் நாடுக
         குணக்குச் சில தூதர் தேடுக      வெனமேவிக்

குறிப்பிற் குறிகாணு மாருதி
         யினித்தெற் கொருதூது போவது
         குறிப்பிற் குறிபோன போதிலும்   வரலாமோ

அடிக்குத் திரகார ராகிய
         அரக்கர்க் கிளையாத தீரனு
         மலைக்கப் புறமேவி மாதுறு      வனமேசென்

றருட்பொற் றிருவாழி மோதிர
         மளித்துற் றவர்மேல் மனோகர
         மளித்துக் கதிர்காம மேவிய      பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.