முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 676

திருவடியை நினைக்கவேண்டும்

Updated On : 28 அக்டோபர், 2017 at 9:42 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:28 PM

திருவடியை நினைக்கவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் கதிர்காமத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட சிறிய வடிவம்.  முதற் சீரில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டாம் சீரில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; மூன்றாம் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு ஒற்றெழுத்தும்; தொங்கல் சீரில் எப்போதும் போல நான்கெழுத்துகளும் அமைந்து இரட்டித்துள்ளன.

தனன தான தத்த                         தனதான 

Advertisement

எதிரி லாத பத்தி                          தனைமேவி
      இனிய தாள்நி னைப்பை             யிருபோதும்

இதய வாரி திக்கு                         ளுறவாகி
      எனது ளேசி றக்க                   அருள்வாயே

கதிர காம வெற்பி                         லுறைவோனே
      கனக மேரு வொத்த                புயவீரா

மதுர வாணி யுற்ற                        கழலோனே
      வழுதி கூனி மிர்த்த                 பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.