முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 736

திருக்கழல்களைத் தந்தருளவேண்டும்

Updated On : 15 ஜனவரி, 2018 at 10:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:29 PM

ஞானமாகிய உனது திருக்கழல்களைத் தந்தருளவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 14 எழுத்துகளைக் கொண்ட மிகச்சிறிய அமைப்பு.  ஒன்று மூன்று ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாய் மூன்றெழுத்துகளையும்; இரண்டு, (தொங்கல் சீராகிய) நான்கு ஆகிய சீர்களில் இரண்டு குறில் இரண்டு நெடில் என நான்கெழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கிறது.


தானானத் தனதானா
      தானானத் தனதானா

Advertisement

நீதானெத் தனையாலும் 
      நீடூழிக் க்ருபையாகி

மாதானத் தனமாக
      மாஞானக் கழல்தாராய்

வேதாமைத் துனவேளே
      வீராசற் குணசீலா

ஆதாரத் தொளியானே
      ஆரூரிற் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.