பகுதி - 744
உனது தரிசனத்தைத் தந்தருள வேண்டும்
‘உனது தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கேட்கின்ற இப்பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித் 14 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லொற்றும் அமைந்துள்ளன.
தனதனன தனன தந்தத் தனதானா
Advertisement
இருவினையின் மதிம யங்கித் திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே
சிவனருளு முருக செம்பொற் கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.