பகுதி - 832
உன் திருவடிகளை எப்போதும்..
‘உன் திருவடிகளை எப்போதும் துதிக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று குற்றெழுத்துகளால் அமைந்திருக்கின்றன.
தனன தனன தனன தனன
Advertisement
தனன தனன தனதான
பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
பழைய அடிமை யொடுமாதும்
பகரி லொருவர் வருக அரிய
பயண மதனி லுயிர்போகக்
குணமு மனமு முடைய கிளைஞர்
குறுகி விறகி லுடல்போடாக்
கொடுமை யிடுமு னடிமை யடிகள்
குளிர மொழிவ தருள்வாயே
இணையி லருணை பழநி கிழவ
இளைய இறைவ முருகோனே
எயினர் வயினின் முயலு மயிலை
யிருகை தொழுது புணர்மார்பா
அணியொ டமரர் பணிய அசுரர்
அடைய மடிய விடும்வேலா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய பெருமாளே.