பகுதி - 834
கருணை புரிந்தருள வேண்டும்..
‘கருணை புரிந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரணடு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தந்த தனன தந்த தனன
Advertisement
தந்த தனன தனதான
மைந்த ரினிய தந்தை மனைவி
மண்டி யலறி மதிமாய
வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
வன்கை யதனி லுறுபாசந்
தந்து வளைய புந்தி யறிவு
தங்கை குலைய உயிர்போமுன்
தம்ப முனது செம்பொ னடிகள்
தந்து கருணை புரிவாயே
மந்தி குதிகொ ளந்தண் வரையில்
மங்கை மருவு மணவாளா
மண்டு மசுரர் தண்ட முடைய
அண்டர் பரவ மலைவோனே
இந்து நுதலு மந்த முகமு
மென்று மினிய மடவார்தம்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய பெருமாளே.