பகுதி - 904
நொந்து போகாமல் ஆண்டருள..
‘நொந்து போகாமல் ஆண்டருள வேண்டும்’ என்று நாயகி பாவத்தில் கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதன தனன தனதன தனன
Advertisement
Advertisement
தனதன தனன தந்ததான
இடமடு சுறவை முடுகிய மகர
மெறிகட லிடையெழு திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவி
லெரியென வருசிறு தென்றலாலே
தடநடு வுடைய கடிபடு கொடிய
சரம்விடு தறுகண நங்கனாலே
சரிவளை கழல மயல்கொளு மரிவை
தனிமல ரணையின லங்கலாமோ
வடகுல சயில நெடுவுட லசுரர்
மணிமுடி சிதறஎ றிந்தவேலா
மறமக ளமுத புளகித களப
வளரிள முலையைம ணந்தமார்பா
அடலணி விகட மரகத மயிலி
லழகுட னருணையி னின்றகோவே
அருமறை விததி முறைமுறை பகரு
மரியர பிரமர்கள் தம்பிரானே.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.