இந்த நாளில் அன்று (25.04.1950) காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வுக்கு வெளியிலேயே தீர்க்கலாம்; நாம் அழிந்தால் ஆசியாவுக்கு விமோசனமில்லை - பாக்
காஷ்மீர் தகராறு சம்பந்தமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பந்தோபஸ்து கவுன்சிலுக்கு வெளியிலேயே ஒரு சமரசம்
காஷ்மீர் தகராறு சம்பந்தமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பந்தோபஸ்து கவுன்சிலுக்கு வெளியிலேயே ஒரு சமரசம் செய்துகொள்வதை யாரும் தடுக்க முடியாது என்று பாகிஸ்தான் வெளிநாட்டு இலாகா மந்திரி ஸர். முகம்மது ஜாபருல்லாகான் கூறினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்கு காஷ்மீர் தகராறுதான் முக்கிய இடையூறென்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.
லியாகத் அலிகானும் நேருவும் சந்திக்கும்போது காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேசப்படலாமென்றும், ஆனால் இதுபற்றி தமக்கு திட்டமாக ஒன்றும் தெரியாதென்றும், டில்லியில் இரு பிரதமர்களும் சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்னை பற்றிப் பேச முயற்சி நடந்ததாகத் தாம் அறிவதாகவும் கூறினார்.
Advertisement
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி நிலவ வேண்டிய அவசியம் பற்றி அவர் குறிப்பிட்டு, நம் இரு நாடுகளையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், கிழக்கத்தி நாடுகளிடையிலேயே இவைதான் பெரிய தொகுதியாகும். நாம் அழிந்தால் ஆசியாவுக்கு விமோசனமில்லை என்று கூறினார்.