இந்த நாளில் அன்று - (07.08.1947) - இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒன்றாகிவிடும்; பிரிவினையை ஒப்புக்கொள்ளவே மாட்டேன் என்கிறார் ராஷ்டிரபதி கிருபளானி
இந்தியாவும் பாகிஸ்தானும் சீக்கிரம் ஒரு யூனியனாகிவிடும் என்று ராஷ்டிரபதி கிருபளானி கூறினார். இயற்கையாகவும் நாகரிகத்திலும் கலாசாரத்திலும் ஒன்றாக இருக்கும் ஒரு நாட்டை பிரிக்கவே முடியாது என்று அவர் கூறினார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் சீக்கிரம் ஒரு யூனியனாகிவிடும் என்று ராஷ்டிரபதி கிருபளானி கூறினார். இயற்கையாகவும் நாகரிகத்திலும் கலாசாரத்திலும் ஒன்றாக இருக்கும் ஒரு நாட்டை பிரிக்கவே முடியாது என்று அவர் கூறினார்.
நான் எந்தப் பிரிவினையையும் ஒப்புக்கொள்ள மாட்டேன். எனக்கு எதாவது பாஸ்போர்ட் நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் நான் அதை மீதி ஸத்யாக்ரஹம் செய்வேன் என்றார்.
பாகிஸ்தான் சர்க்கார் மைனாரிடிகளை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தாவிட்டால் எதிர் நடவடிக்கைகள் இருக்கவே செய்யும் என்று அவர் எச்சரித்தார்.
Advertisement
ஹிந்துக்கள் சிந்துவை விட்டு வெளியேறவே கூடாது என்று அவர் கூறினார். சர்க்கார் கேட்டுக்கொண்டால், மைனாரிடிகள் கௌரவத்துடன் கூடிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மைனாரிடிகளின் பலன் அவர்களுடைய எண்ணிக்கையில் அல்ல, ஒன்று பட்டிருப்பதில் இருக்கிறது.
மராட்டியர் சொற்க தொகையினர்தான். ஆயினும் தங்களிடையே உள்ள ஒற்றுமையினால் அவர்கள் மொகலாய சாம்ராஜ்யத்தையே ஆட்டிவைத்தனர்.
சிந்துவின் முஸ்லிம் முதலாளிமார்களும் ஜமீன்தார்களும் முஸ்லிம் பாமர மக்களின் மத உணர்ச்சியை அளவு கடந்து பயன்படுத்திக்கொண்டுவிட்டார்கள். இப்போது பாகிஸ்தான் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் தங்களுடைய உரிமைகளை வற்புறுத்தக் கிளம்பிவிடுவார்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சீக்கிரம் ஒரு யூனியன் ஏற்பட்டுவிடும் என நம்புகிறேன். இந்தியாவில் காங்கிரஸ் ஜமீன்தாரிகளை ஒழித்துவிடும். கைத்தொழில்களை யெல்லாம் தேசியமயமாக்கிவிடும்.
பாகிஸ்தானிலும் இதன் விளைவுகள் இருக்கத்தான் செய்யும். இப்போது இரு பிரதேசங்களுக்கும் இடையே ஒரு யூனியன் ஏற்படும் என்றார் கிருபளானி.