இந்த நாளில் அன்று - (08.08.1948) - பிடாரிகளின் அட்டூழியங்களுக்கு பாகிஸ்தானை பழிவாங்குவோம் - ஷேக் அப்துல்லா சபதம்
பொய், மோசடி என்ற அஸ்திவாரத்தின் மீதே பாகிஸ்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிரபராதியான மக்கள் மீது பாகிஸ்தான் ஆக்ரமிப்பாளர்கள் புரிந்துள்ள பெருவாரியான அட்டூழியங்களுக்கு எனது சர்க்கார் குர்-ஆன் நியமப்படி பழிவாங்கியே தீரும் என்று காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா அறிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் இன்று ஒரு உலகப் பிரச்னையாகிவிட்டதென்றும், தாங்கள் எதையும் மறைத்துவைக்க வேண்டியதில்லை என்றும் ஐ.நா. காஷ்மீர் கமிஷன் முன் தங்கள் கட்சியை பூரணமாக திறந்துகூற காஷ்மீர் தயார் என்றும் ஷேக் அப்துல்லா சவால் விடுத்தார்.
முஸ்லிம்களைக் கொல்வதற்காகவே இந்திய ராணுவம் காஷ்மீருக்கு அழைத்து வரப்பட்டது என்று பாகிஸ்தான் ரேடியோவும் பத்திரிகைகளும் செய்து வரும் புளுப் பிரசாரத்தை அவர் மறுத்தார்.
Advertisement
இந்திய ராணுவம் சமஸ்தானத்துக்குள் வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன என்றும், அவர்கள் முஸ்லிம்களைக் கொல்ல விரும்பினால் இதற்குள் பூராவாக அழித்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆனால், முஸ்லிம்கள் தங்கள் மானங்காத்து நாட்டை விடுவித்துக்கொள்வதில் உண்மையில் இந்திய துருப்புகள் உதவி வந்துள்ளன என்றார்.
மோசடி, பொய் இவற்றின் மீதே பாகிஸ்தான் நிறுவப்பட்டுள்ளது. ரஜௌரி, மிர்புர், ஹாங்கர் போன்ற இடங்களில் பாகிஸ்தான் பிடாரிகள் நிரபராதியான மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளுக்காக குரான் நியமப்படி எனது சர்க்கார் பழி வாங்கியே தீரும் என்றார் ஷேக் அப்துல்லா.